- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் மணிரத்னம் மேல் இயக்குனர் கரு பழனியப்பனுக்கு அப்படி என்ன கோபம்? - இப்படி போட்டு...

இயக்குனர் மணிரத்னம் மேல் இயக்குனர் கரு பழனியப்பனுக்கு அப்படி என்ன கோபம்? – இப்படி போட்டு விளாசி இருக்காரே…

- Advertisement -

எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். 5 தொகுப்புகளாக வெளிவந்த இந்த கதை தமிழக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நூல். பொன்னியின் செல்வன் படித்தவர்கள், அந்த கதையில் வரும் அருள்மொழி வர்மன் கரிகால சோழன் ஆழ்வார்கடியான் வந்தியத்தேவன் குந்தவை சுந்தர சோழன் நந்தினி பெரிய பழவேட்டரையர் சின்ன பழவேட்டரையர் போன்ற கேரக்டர்களை வாழும் கதாபாத்திரங்களாகவே கருதுவர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை எம்ஜிஆர் திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டார். பிறகு கமல்ஹாசனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அதன்பிறகு பாரதிராஜாவுக்கு அப்படி ஒரு ஆசை இருந்தது. ஆனால் கடைசியில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவந்தது. இதில் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்ற நிலையில், 2ம் பாகம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் கரு பழனியப்பன் பேசியதாவது, நான் இதுவரை 3 முறை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தொகுப்புகளை வாங்கி விட்டேன். ஒவ்வொரு தொகுப்பிலும் 5 பாகங்கள் வரும். ஆனால் என்னால் இதுவரை வீராணம் ஏரியை தாண்டி படிக்க முடியவில்லை. எவ்வளேவோ முயற்சித்தும் என்னால் அதற்கு மேல் வாசிக்க முடியவில்லை. அச்சுதான் சரியில்லை என்று 3 முறை புத்தகம் வாங்கியும் வீராணம் ஏரியை என்னால் கடக்க முடியவில்லை.

10 ஆண்டுகளாகியும் படிக்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் படமாக எடுக்கிறார். அதற்குள் படித்து விடலாம் என்று முயற்சித்தும் என்னால் வீராணம் ஏரியை கடந்து வாசிக்கவே முடியவில்லை. இதுபற்றி என் நண்பரிடம் வருத்தப்பட்டு சொன்னேன். அதற்கு அவர், அதை 17 18 வயசுக்குள்ள படிச்சு முடிச்சிரணும். அதுக்கு மேல படிக்க முடியாது என்றார்.

ஆனால் புத்தக கண்காட்சிகளில் பொன்னியின் செல்வன் புத்தகம் தொடர்ந்து வித்துக்கிட்டே இருக்கு. நல்ல வேளையா, மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் எடுத்தார். இந்த புத்தக விற்பனையை நிறுத்திட்டார். எங்கும் இந்த புத்தகம் விக்கறதே இல்லை.

இது தெரியாமல், 2000 2000 காப்பி புதுசா அடிச்சவன் எல்லாம் அந்த புத்தகங்களை எல்லாம் என்ன பண்றதுன்னு தெரியாமல் இருக்கிறான். புத்தக கண்காட்சியில் யாரும் இந்த புத்தகத்தை வாங்கறதே இல்லை. அது ஒரு கதை. அதை ஒரு வரலாறுன்னு நெனைச்சு 38, 40 வருஷமாக மக்கள் படிச்சிருக்காங்க என்று பேசியிருக்கிறார் இயக்குனர் கரு பழனியப்பன்.

சற்று முன்