- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது மறுபடியும் சூர்யாவின் அஞ்சான் படம் வரப்போகிறதா... ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்குதா......

என்னது மறுபடியும் சூர்யாவின் அஞ்சான் படம் வரப்போகிறதா… ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்குதா… என்னங்க ஒரே குழப்பமா இருக்குது….

- Advertisement -

ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அண்ணன் தம்பி என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் என அந்த திரைப்படத்தில் நடித்த அத்தனை பேரும் மிகக் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இப்படி முதல் திரைப்படத்தின் மூலமே பலரது கவனத்தையும் பெற்ற லிங்குசாமி அடுத்ததாக ரன் திரைப்படத்தை இயக்கி ஆச்சரியத்தை கொடுத்தார். முதல் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பக் கதைக்களம் என்றால், இது காதல் திரைப்படம். அதிலும் ஆக்சன் காட்சிகளை கலந்து, கலக்கி இருந்தார் லிங்குசாமி. இந்த இரண்டு திரைப்படங்களின் மூலமே அவர் கமர்சியல் கிங் என்று நிரூபித்தார்.

- Advertisement -

பிறகு விஷாலுடன் அவர் இணைந்து பணியாற்றிய சண்டக்கோழி திரைப்படத்தின் வெற்றியை நாம் சொல்லி தேவையில்லை. ஒரு ஆக்சன் கலந்த மசாலா திரைப்படமாக அது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது. அதிலும் இடைவேளை காட்சியில், ராஜ்கிரணின் வருகையும், வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்தன.

இப்படி முன்னணி இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி, சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் அஞ்சான். 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரைலர் மிக நன்றாக இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்தது. அது மட்டுமல்லாமல், அஞ்சான் திரைப்படத்திற்காக சூர்யாவின் தோற்றமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் திரைப்படத்திற்கு முன்பாக ஒரு பேட்டியில் பேசியிருந்த லிங்குசாமி, இந்த திரைப்படத்தை செதுக்கி இருப்பதாகவும், படத்தின் மூலம் டியூன் ஆகி இருப்பதாகவும் கூறியிருந்தார். இப்படியான சூழலில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அத்துடன் மட்டுமில்லாமல் அஞ்சான் இணையத்தில் பெரிய அளவில் கேலி கிண்டலுக்கும் ஆளானது.

இப்படியான சூழலில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் சொல்லி இருக்கும் லிங்குசாமி, அஞ்சான் திரைப்படத்தை யூட்யூபில் ஹிந்தியில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ரீ எடிட் செய்துள்ளனர். இது அங்கு நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. எனக்கு அதைப் பார்த்தபோது இது ஏன் நமக்கு தோன்றவில்லை என எண்ணினேன். இதனால் தமிழிலும் இதனைக் கொண்டு வரலாம் என முடிவு செய்திருக்கிறோம். தற்போது ரீ எடிட் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்