- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் - இரண்டே வார்த்தைகளில்...

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் – இரண்டே வார்த்தைகளில் மொத்த படத்தையும் சொன்ன இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் லியோ படங்களும் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால் முன்னணி இயக்குனராக மாறினார்.

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற எல்சியு கான்செப்ட்டை அவர் உருவாக்கி தனது முந்தைய பட கேரக்டர்களை தனது அடுத்தடுத்த படங்களிலும் கொண்டு வருகிறார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு தந்திருக்கிறது. இதனால் அவரது அடுத்த படங்களில் எல்சியு வருகிறதா என ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

- Advertisement -

மாநகரம் முதல் லியோ வரை 5 படங்களை இயக்கிய லோகேஷ்
அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்காக தாய்லாந்தில் லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார்.

- Advertisement -

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அது அதிரடி ஆக்சன் படங்களாக தான் இருக்கின்றன. ரத்தம் சொட்டும் கதைக்களத்தில் துப்பாக்கி குண்டுகளும் பீரங்கி வெடிகளும் கத்தி குத்து சம்பவங்களும் தரமாக இருக்கும். அதே போல் அருண் மாதேஸ்வரனும் வன்முறை கதைக்களங்களில் படங்களை தரும் இயக்குனராக உள்ளார்.

இதில் ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ், தாய்லாந்தில் தற்காற்பு கலை பயிற்சி பெறுகிறார் என்றால், இந்த படம் நிச்சயம் ஆக்சன் படமாக தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த சூழலில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் லோகேஷ் கனகராஜூடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, வன்முறை மட்டும்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் படம் முழுக்க கத்தி ரத்தம் துப்பாக்கி வெடிச்சத்தம் என முழுக்க முழுக்க இது ஆக்சன் படம்தான் என இரண்டே வார்த்தைகளில் அவர் முழு படத்தையும் சொல்லி விட்டார்.

- Advertisement -

சற்று முன்