- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்த மாரி செல்வராஜ்... இயக்குனரின் பிறந்தநாளன்று வெளியான முக்கியமான அறிவிப்பு...

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்த மாரி செல்வராஜ்… இயக்குனரின் பிறந்தநாளன்று வெளியான முக்கியமான அறிவிப்பு…

- Advertisement -

கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். இவர் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருப்பார். ராமிடம் சேர்ந்து இயக்கத்தை கற்றுக் கொண்ட அவர், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை எடுத்தார்.

முதல் திரைப்படமே மாரி செல்வராஜ்க்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு சாதிய அரசியலை, அதன் ஏற்றத்தாழ்வை பா ரஞ்சித் படமாக்கி விட்டாலும் அதனை தனித்துவமாக தனக்கு ஏற்றார் போல் காட்சி அமைத்து சபாஷ் போட வைத்தார் மாரி செல்வராஜ்.

- Advertisement -

பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த, அதனைத் தொடர்ந்து தனுசை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தனது முந்தைய திரைப்படத்தில் ஆயுதம் இல்லாமல் ஹீரோ போராட, இந்த முறை கதாநாயகன் கையில் வாளை கொடுத்து விட்டார் மாரி.

கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக உதயநிதியுடன் சேர்ந்து மாமன்னன் திரைப்படத்தை அவர் இயக்கினார். நாற்காலி அரசியலை நறுக்கென்று பேசிய இந்த திரைப்படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் தனது முந்தைய திரைப்படங்களை விட, இதில் இயக்குனர் சொல்ல வந்தது அந்த அளவுக்கு சுவாரசியமாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இப்படியான சூழலில் தற்போது அவர் வாழை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சிறுவர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து புதிய திரைப்படத்தை மாரி இயக்குகிறார். இந்த நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட, ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் எங்கள் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம், சிங்கம் 2, தேவ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது. தற்போது இந்நிறுவனம் மாரி செல்வராஜுடன் இணைந்து இருப்பதால் படத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்