- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணைந்த படத்தை டைரக்ட் செய்யாமல் வெளியேறியது ஏன்? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

ரஜினி கமல் இணைந்த படத்தை டைரக்ட் செய்யாமல் வெளியேறியது ஏன்? – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். அதற்காக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கூலி படம் ஓடியதற்கு மக்களுக்கு நன்றி. கூலி படத்துக்கு வந்த விமர்சனங்களை ஆராய்ந்து வருகிறேன்.

என்னிடமிருந்து மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். இனிமேல் விமர்சனங்கள் இல்லாத வகையில் படம் எடுக்க முடிவு செய்திருக்கிறேன். கூலி படத்துக்கு பிறகு ரஜினி கமல் இருவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக நல்ல ஒரு கதையை ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு இருவரிடமும் தனித்தனியாக கதை சொன்னேன்.

- Advertisement -

அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களை செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் வேறு ஒரு யதார்த்தமான எளிதான கதையை யோசித்தார்கள். அப்படி எனக்கு கதை பண்ண வராது என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். எனக்கும் கைதி 2ம் பாகம் படம் பண்ண வேண்டி இருந்தது. அதற்குள் கைதி 2 படத்துக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை கார்த்தி வேறு படங்களுக்கு கொடுத்து விட்டார்.

இந்த இடைவெளியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அட்வான்ஸ் கொடுத்து இருந்தார்கள். அவர்களுடன் படம் பண்ண முடிவு செய்து அவர்கள் தயாரிப்பில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க முடிவானது. கைதி 2 படத்தில் அதிக சம்பளம் கேட்டேன் என்பது வதந்தி. அப்படி எல்லாம் நான் கேட்கவில்லை.

- Advertisement -

எல்சியு ( லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) இன்னும் மூடப்படவில்லை. அது இனிமேல்தான் தொடங்குகிறது. கைதி 2 விக்ரம் 2 ரோலக்ஸ் படங்கள் பண்ணாமல் நான் போக முடியாது. இனி எல்சியு சம்பந்தப்பட்ட படங்கள் வந்து கொண்டே இருக்கும். இந்தி நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து படம் இயக்குவது பேச்சுவார்த்தையில் உள்ளது. விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டேன்.

பாராட்டுகளைப் போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என் மீதான விமர்சனங்களை அக்கறையாகவே பார்க்கிறேன். டிசி படத்துக்கு பிறகு இனிமேல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். சமூக ஊடகங்களையும் அதில் வரும் எதிர்மறை விமர்சனங்களையும் தடுக்க முடியாது. ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்