- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி சார் கிட்ட முதல்ல சொன்ன கதையை நான் இதுல பண்ணலே - கூலி படம்...

ரஜினி சார் கிட்ட முதல்ல சொன்ன கதையை நான் இதுல பண்ணலே – கூலி படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக கொண்டாடப்படுவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல் குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் இயக்குனராக களம் இறங்கிய அவர் முதல் படத்திலேயே பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய கைதி படமும் கமல் நடிப்பில் இயக்கிய விக்ரம் படமும் பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களாக இருந்தன. தொடர்ந்து மாஸ்டர் லியோ படங்களும் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார்.

- Advertisement -

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற எல்சியு முறையில் அவர் இயக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதாவது ஒரு படத்தில் நடித்த கேரக்டரை அவர் தனது அடுத்தடுத்த படங்களில் கொண்டு வருவதால் அந்த படங்களின் காட்சிகளில் வைப் அதிகரித்து விடுகிறது. அவர் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ரஜினி சாருக்கு நான் சொன்ன கதையே வேற. அந்த கதை நான் பண்ணவே இல்லை. கூலி படத்துல அந்த கதை பண்ணலே. ஆனா 2 மாதம் அதுக்குதான் வேலை பார்த்தோம். அது ரஜினி சாருக்கு ரொம்ப பிடிச்ச கதை. எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

- Advertisement -

அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு ரஜினி சாருக்கு போன் பண்ணி, சார் நாம அந்த கதை பண்ண வேண்டாம். நான் நேர்ல வந்து உங்களை மீட் பண்ணி வேற கதை சொல்றேன் அப்படீன்னு சொன்னேன். என்னாச்சு அப்படீன்னார். இல்லே சார். நான் நேர்ல வந்து சொல்றேன்னு சொன்னேன்.

அப்படி சொன்ன கதை தான் இப்போ உருவாகி இருக்கிற கூலி படம். அந்த கதையை விட இதில் நிறைய விஷயங்கள் எனக்குள்ள இருக்கு. அதே நேரத்தில் ரஜினி சார் நேரத்தை நான் வீணா்ககவும் முடியாது. அதனால இந்த கதையை நான் மறுபடி பண்ணினேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்