- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த இயக்குனர் ஆர்ஜே...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்? – உண்மையை போட்டுடைத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாநகரம் மாஸ்டர் லியோ விக்ரம் கைதி கூலி போன்ற படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்போது கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. லோகேஷ் கனகராஜ் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு என்ற பகுதியை சேர்ந்தவர்.

கடந்த 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த தேர்தலில் ஏராளமான மக்கள் வந்து ஓட்டு போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். சுட்டெரிக்கும் வெயிலில் மதிய வேளையில் கூட மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். அதனால் முதன்முறையாக ஓட்டுப்பதிவு சதவீதம் 85க்கும் அதிகமாக இந்த முறை வந்துள்ளது.

- Advertisement -

ஆனால் கலைத்துறை சார்ந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்த நேரில் வரவில்லை. அதே நேரத்தில் வெளியூர்களில் வெளிமாநிலங்களில் ஷூட்டிங் இருந்த நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் கூட சென்னைக்கு வந்து தங்களது ஓட்டை பதிவிட்டு ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

அதே நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் ஓட்டுப் போட வராதது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது. இந்நிலையில் 29 என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, சென்னையில் ஓட்டு போட்டுவிட்டு மும்பை செல்வதற்காக நான் விமான நிலையம் சென்றேன்.

- Advertisement -

அப்போது கோயம்புத்தூருக்கு சென்று ஓட்டு போடுவதற்காக லோகேஷ் கனகராஜ் அங்கு வந்தார். இருவரும் பார்த்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டோம். நான் உள்ளே சென்ற பிறகு திரும்பி வந்து பார்த்தால் லோகேஷ் கனகராஜை 4 அதிகாரிகள் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்தை கடந்து தாமதமாக வந்தார் என்பதால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்பது பின்புதான் தெரிந்தது. அதனால் தான் அவரால் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டு போட முடியவில்லை. இந்த தகவலை இப்போது முதல் ஆளாக நான்தான் வெளியே சொல்கிறேன் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்