- Advertisement -
Homeபொழுதுபோக்குடைனோசார்ஸ் பட இயக்குனர் எம்ஆர் மாதவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆன படம் என்னாச்சு?...

டைனோசார்ஸ் பட இயக்குனர் எம்ஆர் மாதவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆன படம் என்னாச்சு? – 3 ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான திரைப்படம் டைனோசார்ஸ். இந்த படத்தை இயக்குனர் எம்ஆர் மாதவன் டைரக்ட் செய்திருந்தார். இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உதய கார்த்திக் ரிஷி ரித்விக் சாய் பிரியா தேவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு படத்தை ஜிஆர் மாதவன் இயக்குவதாக இருந்தது. சிம்புவும் கதையை கேட்டு ஓகே சொல்லியிருந்தார். ஆனால் அந்த படம் அடுத்தகட்ட நகர்வுக்கு 3 ஆண்டுகளாக செல்லாத நிலையில் இப்போது ஜிஆர் மாதவன், டைனோசார்ஸ் படத்தின் 2ம் பாகத்தை இயக்க தயாராகி விட்டார். முதல் பாகத்தில் வந்த அதே நடிகர்கள் தொழில்நுட்பகலைஞர்கள் இந்த படத்திலும் கமிட் செய்யப்பட்டுள்ளார்கள். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சற்று முன்