- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஆவணப் பட வழக்கில் சிக்கிய நடிகை நயன்தாரா… இந்த முறை சந்திரமுகி விவகாரம் -...

மீண்டும் ஆவணப் பட வழக்கில் சிக்கிய நடிகை நயன்தாரா… இந்த முறை சந்திரமுகி விவகாரம் – 2 வாரங்களில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இப்போது தெலுங்கில் மெகா 157 படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆல்பம் வீடியோ ஆவணப்படமாக உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

- Advertisement -

அந்த திருமண ஆல்ப வீடியோவில், நடிகர் தனுஷ் தனது வுண்டர்ஃபார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தியதாக புகார் எழுப்பினார். நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளரான தனது அனுமதியின்றி பயன்படுத்திய வீடியோ காட்சிகளுக்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ், நயன்தாரா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. சந்திரமுகி படத்தில் சில காட்சிகளை தனது திருமண வீடியோவில் நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் இதனால் அவரிடம் ரூ 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

- Advertisement -

நயன்தாரா; பியாண்ட் தி பேரிஃடேல் என்ற இந்த ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்திய கூறி 5 கோடி ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் பியாண்ட் தி பேரிஃடேல் ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி அந்த படத்தின் பதிப்புரிமை பெற்ற ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஆவணப்படம் விவகாரத்தில் நடிகை நயன்தாரா சிக்கி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சந்திரமுகி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் என்ஓசி பெற்றதாக நயன்தாரா தரப்பு கூறிய நிலையில், பதிப்புரிமை பெற்ற நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்