- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிக்கும் டி56 படத்தின் கதைக்களம் இதுதான்… ஷூட்டிங் எப்போது? அப்டேட்டுகளை அள்ளித் தந்த...

நடிகர் தனுஷ் நடிக்கும் டி56 படத்தின் கதைக்களம் இதுதான்… ஷூட்டிங் எப்போது? அப்டேட்டுகளை அள்ளித் தந்த இயக்குனர் மாரி செல்வராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படம் நல்ல வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து அவர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவை மாறுபட்ட ஒரு எம்எல்ஏ கேரக்டரில் அவர் நடிக்க வைத்திருந்தார். உண்மையில் அது வடிவேலுதானா என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு அழுத்தமான நடிப்பை வடிவேலு தந்திருந்தார்.

- Advertisement -

மாமன்னன் படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கிய படம் வாழை. இந்த படம் ஒரு தரப்பு ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்ற நிலையில் ஒரு தரப்பினருக்கு இந்த படம் கதைக்களம் பிடிக்கவில்லை. எனினும் தனது வாழ்வியல் சம்பவத்தை மாரி செல்வராஜ் வாழை படமாக தந்திருந்தார்.

இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்த தேரே இஷ்க் மெயின் படம் வெளியானது. அதன் பிறகு போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி 55 என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தான் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருந்த நிலையில் இது அவர்கள் கூட்டணியில் 2வது படமாகும்.

தனது இயக்கத்தில் உருவாகும் டி56 படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வரும் செப்டம்பர் மாதம் டி 56 படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த கதைகளத்தில் உருவாகிறது. இந்த படம் என்னுடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய முக்கிய படமாக அமையும் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க தனுஷ் 6 மாதங்கள் கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்