- Advertisement -
Homeபொழுதுபோக்குட்ரெயின் படத்தில் டைரக்டர் மிஷ்கின் இப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாரே? - கடைசியில் அவங்களுக்கு ஆப்பு...

ட்ரெயின் படத்தில் டைரக்டர் மிஷ்கின் இப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாரே? – கடைசியில் அவங்களுக்கு ஆப்பு வெச்சுட்டாரே? – ரசிகர்கள்தான் பாவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். மற்ற இயக்குனர்களுக்கு மத்தியில் மிஷ்கின் வித்யாசமான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாமே, வித்யாசமான கதைக்களமாகவும், விறுவிறுப்பான கதையாகவும் இருந்து வருகிறது.

உதாரணமாக, விஷால் நடித்த துப்பறிவாளன் படம், மிஷ்கின் இயக்கத்தில் மிகவும் தரமான ஒரு படமாக, ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட படமாகவும் இருந்தது. இந்த படம் மிஷ்கினுக்கு மட்டுமின்றி நடிகர் விஷாலுக்கும் மிக முக்கிய படமாக, அவர் நடித்த படங்களில் ஒன்றாக அமைந்தது. திமிரு, சண்டக்கோழி படங்களும் விஷாலுக்கு நல்ல வெற்றிப் படங்களாக இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் மிஷ்கின் டைரக்டராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களை அசத்தி வருகிறார். குறிப்பாக சவரக்கத்தி படத்தில், அவரது காமெடி கலந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக அரசியல்வாதி கேரக்டரிலும், லியோ படத்தில், கொள்ளைக்காரன் கேரக்டரிலும் மிஷ்கின் நடிப்பு பேசப்பட்டது.

இயக்குனர் மிஷ்கின், நடிகர் மட்டுமின்றி மேடை பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அவர் பேசுவது சில நேரங்களில் எக்குத்தப்பாக இருந்தாலும் அவர் சொல்கிற விஷயங்களில், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி மேடை அலங்காரமின்றி மனதில் பட்டதை பேசி விடுகிறார். அது சில நேரங்களில் வில்லங்கமாக இருந்தாலும், அவரது உண்மையை பலரும் பாராட்டவே செய்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ட்ரெயின். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் 4 பாடல்களை அவரே பாடி இருக்கிறார். ஒரே ஒரு பெண் குரல் பாடலை மட்டுமே கமல் மகள் ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் தனது இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் படத்துக்காக 4 பாடல்களை பாடியிருப்பது, பாடகர் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியில் அவரே 4 பாடல்களை பாடி நமக்கு ஆப்பு வைத்துவிட்டாரே, என பாடகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். அதே நேரத்தில் சில மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடியிருக்கிறார் மிஷ்கின். ஆனால் ட்ரெயின் படத்தில் அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள், ரசிகர்களை கவருமா என்பதற்கு ட்ரெயின் படம்தான் பதில் சொல்லும்.

- Advertisement -

சற்று முன்