தமிழ் சினிமாவில் பிரபல எடிட்டர் மோகனின் மகன்கள் மோகன் ராஜா, ஜெயம் ரவி. அண்ணனின் இயக்கத்தில் தம்பி ஹீரோவாக அறிமுகமான படம் ஜெயம். நடிகை சதா தமிழில் அறிமுகமான இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் ஜெயம் ரவி என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன், போகன், அடங்க மறு, நிமிர்ந்து நில் போன்ற போன்ற வெற்றிப் படங்களில் நடித்த ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் சரியாக ஓடுவதில்லை. இறைவன், அகிலன், சைரன் என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவி சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தந்த படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி கேரக்டரில் ஜெயம் ரவியும், வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமியும் வேற லெவலில் நடித்திருப்பர். ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய இந்த படம், கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி, அப்போதே 18 நாட்களில் 78 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
இந்த படத்தின் தொடர்ச்சியாக தனி ஒருவன் 2 படத்தை இயக்க மோகன் ராஜா தீவிர ஆர்வம் காட்டிய நிலையில், ஜெயம் ரவி கால்ஷீட் தராமல் 9 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில், சமீபத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் 120 கோடி என்றதால், படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஜெயம் ரவியை நம்பி 120 கோடி ரூபாய் பட்ஜெட் போட முடியாது. பிறகு பார்க்கலாம் என, தனி ஒருவன் 2 படத்தை தள்ளி வைத்துள்ளது.
ஆனால் இதற்காக அப்செட் ஆக வேண்டிய இயக்குனர் மோகன் ராஜா, பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார். அண்ணனின் உற்சாகத்தை பார்த்து ஜெயம் ரவி, நொந்து போய் அப்செட் ஆகி உள்ளார். ஆனால் ஒரு படம் போனால் என்ன, இப்போது கையில் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் மோகன் ராஜா பயங்கர உற்சாகத்தில் இருந்து வருகிறார்.
அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு மோகன் ராஜாவுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை சிரஞ்சீவியின் மூத்த மகள்தான் தயாரிக்கிறார். இது மெகா பட்ஜெட் படம். அதே போல், நடிகர் அஜீத்குமாரை, மோகன்ராஜா சந்தித்து கதை சொல்லியுள்ளார். அஜீத்குமாருக்கு கதை மிகவும் பிடித்து போய், குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அவர் ஒருவேளை இந்தி படம் இயக்கச் சென்றுவிட்டால், என்னுடைய 64வது பட இயக்குனர் நீங்கள்தான், இந்த கதையை செய்வோம் என்றும் உறுதி தந்துவிட்டார். அதனால், தனி ஒருவன் தள்ளிப் போனதை கண்டுக்கொள்ளாமல், மோகன்ராஜா செம குஷி மூடில் இருந்து வருகிறார்.





