கௌரவ தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்குகிறார். கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் சில முக்கிய காட்சிகள், அதாவது ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் பலவும் ஹார்டு டிஸ்க்கில் இருந்து அழிந்து விட்டதாகவும், அதை எடுக்க வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கலைஞர் வர இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.
ஏற்கனவே, பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் இதுபோன்ற ஒரு பிரச்னை ஏற்பட்டு, படத்தில் இருந்த 400க்கும் மேற்பட்ட சாட்ஸ்கள் காணாமல் போய் விட்டதாகவும் பிறகு சில தினங்களில் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து, அந்த சார்ட்ஸ்களை திரும்ப மீட்டதாகவும் இயக்குநர் பி.வாசு கூறி இருந்தார்.
அதே போன்ற பிரச்னை லால் சலாம் படத்துக்கும் ஏற்பட்டுள்ளதாக எண்ணி, ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இதன் காரணமாக வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வேண்டிய லால் சலாம் தள்ளி போய்விடுமோ என்றும் ரசிகர்களிடையே பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் எந்த ஒரு காட்சியும் ஹார்டு டிஸ்க்கில் இருந்து அழியவும் இல்லை. அதை திரும்பவும் மீட்டெடுக்க எந்த தொழில்நுட்ப கலைஞரும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இது முழுக்க முழுக்க லால் சலாம் படக்குழுவே கிளப்பிவிட்ட கட்டுக்கதை என்றும் தெரிய வந்துள்ளது.
அதாவது சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4, சிவகார்த்திகேயன் நடித்த அயலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் ஆகிய 3 படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவி தான் வெளியிடுகிறது. இப்படி 3 படங்களையும் ஒரே சமயத்தில் வௌியிட்டால் வருவாய் பாதிக்கும் என்பதால், ஒரு படத்தை தள்ளிவைக்க முடிவு செய்து, இறுதியில் லால்சலாம் படத்தை ஜனவரி 26க்கு மாற்றியுள்ளனர். அந்த உண்மையை மறைக்க தான் இப்படி ஒரு பீலா விட்டுள்ளது லால் சலாம் படக்குழு.





