தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் காலத்துக்கும் பேசப்படும் படங்களாக அமைந்து விடுகின்றன. வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு எடுக்கப்படும் கமர்ஷியல் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அந்த படங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளப்படுவது இல்லை.
நடிகர் விஜயை உச்ச நட்சத்திரம் என்று சொன்னாலும் அவர் நடித்த படங்கள் வணிக ரீதியான பெரிய வெற்றியை கொடுத்தன என்பதே தவிர நடிப்பில் அவர் இன்னொரு கமல்ஹாசனோ இன்னொரு விக்ரமோ இல்லை என்பதே உண்மை. அதனால் அவரது படங்கள் வணிக ரீதியாக அதிக லாபத்தை தந்தன. அதனால் அதிக சம்பளம் பெற்ற நட்சத்திர நடிகராக இருந்தார் என்பதுதான் சரி.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் போன்ற பிறவிக் கலைஞர்கள் தங்களது படங்கள் மிக அழுத்தமான சமூக பார்வையுள்ள படங்களாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமும் அக்கறையும் காட்டியிருக்கிறார்கள். நடிப்பில் மட்டுமின்றி சமூக விழிப்புணர்விலும் கமல்ஹாசன் அதிக சிரத்தை கொண்ட ஒரு திரைப்பட கலைஞராக இருந்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படம் 1990களில் வெளியானது. இந்த படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இந்த படமும் கதையும் கதைக்களமும் கேரக்டர்களும் பேசப்படுகின்றன. சாதிய கொடுமை சமூக ஏற்றத்தாழ்வை இந்த படம் 35 ஆண்டுகளுக்கு முன்பே வெகு அழுத்தமாக பேசியிருக்கிறது.
சமீபத்தில் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறுகையில் நடிகர் கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான தேவர்மகன் படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் நிகழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், தேவர் மகன் எனக்கு யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா மாதிரி இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து ஆடிகிட்டே ஜாலியாக ஊருக்குள் வரும் ஒரு ஹீரோ கிளைமாக்ஸ்சில் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஊரை காப்பாற்ற கொலை செய்துவிட்டு அதே ரயிலில் அமைதியாக ஏறிச்செல்வார். இந்த இரண்டு காட்சிகளும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பதை சொல்லும் அற்புதம் என்று இயக்குனர் மிஷ்கின் அதில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





