- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு வந்த விசித்திரமான அந்த கனவு, அதில் வந்த அந்த 2 யானை குட்டிகள் -...

எனக்கு வந்த விசித்திரமான அந்த கனவு, அதில் வந்த அந்த 2 யானை குட்டிகள் – வெளிப்படையாக பேசிய இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து முகமூடி அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ பிசாசு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நந்தலாலா உள்ளிட்ட பல படங்களை டைரக்ட் செய்தார்.

மேலும் மாவீரன் லியோ டிராகன் வணங்கான் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் மிஷ்கின் நடித்தும் இருக்கிறார். இப்போது அவரது இயக்கத்தில் டிரெயின் மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் உருவாகிய நிலையில் பல மாதங்களாக அந்த படங்கள் திரைக்கு வராமல் தாமதம் நீடித்து வருகிறது.

- Advertisement -

டிரெயின் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வில்லனாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நாசர் நடித்திருக்கிறார். கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. பிசாசு படத்தின் தொடர்ச்சியாக பிசாசு 2 படத்தை இயக்குனர் மிஷ்கின் உருவாக்கி உள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் மிஸ்கின் பல மாதங்களாக திரைக்கு வராமல் உள்ள தனது படங்கள் குறித்து கூறியதாவது, பிசாசு 2 இன்னும் படம் வெளியாகததால் டிரெயின் படத்தின் வெளியீடு குறித்த எண்ணமும் என் மனதில் அப்படியே நின்று விட்டது.

- Advertisement -

சமீபத்தில் எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு பெரிய யானை இறந்து போன தன் இரண்டு குட்டிகளை தூக்கிக் கொண்டு வந்து என் கிணற்றில் போட்டது. பிறகு என் கனவில் நான் வீட்டுக்குள் சென்று நிறைய பழங்களையும் தண்ணீரையும் கொண்டு வந்து அந்த யானையை முன் சமர்ப்பித்தேன். அதோடு கனவு முடிந்தது.

அந்த கனவின் அர்த்தம் என்னவென்று நான் சாட் ஜிபிடியிடம் கேட்டேன். இறந்து போய் என் மனதில் இருந்த இரண்டு நெருங்கிய உறவினர்களை குறிக்கலாம் என்று அது கூறியது. அப்போதும் அந்த இரண்டு உறவினர்களும் உண்மையில் என் இரண்டு படங்களான டிரெயின் மட்டும் பிசாசு 2 படங்களாக இருக்கலாம் என்று நினைத்தேன் என்று அப்போது இயக்குனர் மிஷ்கின் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்