- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி - கமல் மீண்டும் இணைந்து நடிக்கப் போவது உறுதி - ஆனால் இயக்குனர் லோகேஷ்...

ரஜினி – கமல் மீண்டும் இணைந்து நடிக்கப் போவது உறுதி – ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கிடையாது, அந்த மலையாள இயக்குனருக்குதான் வாய்ப்பா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இந்திய சினிமாவில் சீனியர் நடிகர்களாகவும் இருக்கின்றனர். நடிகர் கமல் 5 வயதில் சினிமாவில் நடிக்க வந்து இப்போது 70 வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அதே போல் 24 வயதில் நடிக்க வந்த ரஜினிகாந்தும் இப்போது 50வது பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறார். 74 வயதிலும் இப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தனது 172வது படம் ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக இப்போது நடித்து வருகிறார். கமல்ஹாசன் அரசியல் களத்தில் ராஜ்யசபா எம்பியாகவும் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 1979ம் ஆண்டில் ரஜினி கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் வெளியானது. அதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி கமல் இணைந்து நடித்திருந்த நிலையில், நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பின் இனி இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தனர். தொழில் ரீதியாக பெரிய வெற்றியடைய இருவரும் தனித்தனியாக பயணிப்போம் என்று முடிவு செய்தனர்.

அதன்பிறகு 46 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்காமல் இரு பெரும் சிகரங்களாக சினிமாவில் உயர்ந்தனர். இப்போது ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கின்றனர். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூலி படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் உஷாரான ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்தும் அதுவாகதான் உள்ளது. அதனால் தெலுங்கு அல்லது மலையாளம் இயக்குனரை இயக்க வைக்கலாம் என கமலிடம் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் கமல் கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பை டைரக்ட் செய்ய வைக்கலாம் என்று கமல் கூறியிருக்கிறார். பாபநாசம் படம் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்து பிறகு கமலை நடிக்குமாறு ரஜினியே பரிந்துரை செய்திருக்கிறார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் நல்ல திறமையான இயக்குனர் என்பதால் அவருக்குதான் ரஜினி கமல் இருவருமே வாய்ப்பு தர விரும்புகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்