- Advertisement -
Homeபொழுதுபோக்குசமூக அக்கறையை திரையில் காட்டுனா மட்டும் போதுமா? நிஜத்துல இப்படி செஞ்சு காட்டணும் -...

சமூக அக்கறையை திரையில் காட்டுனா மட்டும் போதுமா? நிஜத்துல இப்படி செஞ்சு காட்டணும் – இயக்குனர் பா ரஞ்சித் செய்த தரமான செயலுக்கு குவியும் பாராட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தனது 2012ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படம் மூலம் பா ரஞ்சித் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவருக்கு பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி காலா ஆகிய படங்களை அடுத்தடுத்து பா ரஞ்சித் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. கபாலி படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், காலா படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக வணிகத்தில் ஏமாற்றம் தந்தது.

- Advertisement -

தொடர்ந்து ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை தங்கலான் உள்ளிட்ட படங்களை பா ரஞ்சித் இயக்கினார். இந்த படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும் நீலம் புரடக்சன்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் பா ரஞ்சித் படங்கள் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தண்டகாரண்யம் என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட நிலையில் யூஏ சான்றிதழ் பெற்றது. இந்த படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. பேக் நக்சலைட்ஸ் பேசும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தண்டகாரண்யம் படத்தின் ஷூட்டிங், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லாத நிலையில், 8 கிலோமீட்டர் தூரத்துக்கு தயாரிப்பாளர் பா ரஞ்சித் தனது சொந்த செலவில் தார் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சமுதாய கருத்துகளை, அக்கறையை திரையில் சொல்லும் பல இயக்குனர்கள் நடிகர்கள், நிஜத்தில் ஒரு பைசா கூட மக்களுக்காக செலவழிக்க முன்வர மாட்டார்கள். நடிகர்கள் ராகவா லாரன்ஸ் கேபிஒய் பாலா போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. ஆனால் மலைவாழ் கிராம மக்களுக்காக 8 கிலோமீட்டர் தூரத்திற்கு தனது சொந்த செலவில் தார் ரோடு அமைத்து தந்த இயக்குனர் பா ரஞ்சித்தின் இந்த தரமான செயலை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்