- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிவாசி போல எப்படி வேணும்னாலும் நீங்க வாழ்ந்துட்டு போங்க, எங்களை அப்படி வாழச் சொல்லாதீங்க -...

ஆதிவாசி போல எப்படி வேணும்னாலும் நீங்க வாழ்ந்துட்டு போங்க, எங்களை அப்படி வாழச் சொல்லாதீங்க – நடிகர் சத்யராஜூக்கு பதிலடி தந்த இயக்குனர் பேரரசு!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. கடந்தாண்டு திமுகவில் அவர் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய திவ்யா சத்யராஜ், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அதே நேரத்தில் திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் அதிரடியாக கூறியிருந்தார்.

இது இணையத்தில் பல்வேறு விமர்சனங்களை தந்த நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தனது மகள் திவ்யா பேசிய கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன். ஒத்துப் போகிறேன். திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு நிறைய மருத்துவ வசதிகள் உள்ளன என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த வீடியோ வைரலான நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி திரௌபதி 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். வசதியானவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். இளைஞர்களே இப்படிப்பட்ட பேச்சால் பாதை மாறி போய் விடாதீர்கள் என்றும் அவர் வீடியோ ஒன்றில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய இயக்குனர் நடிகர் சத்யராஜ் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில் இயக்குனர் பேரரசு கூறியதாவது, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள். அதை நாங்கள் எதுவும் சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வது, கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, யாரும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று நீங்கள் மக்களுக்கு சொல்லாதீர்கள். கலாச்சாரம் தேவையில்லை. பண்பாடு தேவையில்லை என்று நீங்கள் சொல்லாதீங்க. நீங்கள் பின்னோக்கி போங்க. ஆடைகள் எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்.

அதற்கு ஆதிவாசிகளைப் போலவே இருந்து விட்டு போகலாம். அவர்களுக்கு பண்பாடு இல்லை கலாச்சாரம் இல்லை. ஆடைகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தார்கள். நீங்களும் அதுபோல வாழ்ந்து விட்டு போங்கள். உங்களை யார் வேண்டாம் என்று கூறினார்கள்? அவரது மகள் அப்படி கூறினார் என்றால் அதற்கு சத்யராஜ் சப்போர்ட் செய்கிறார். அது நமது கலாச்சாரத்தையே காலி செய்வது போல இருக்கிறது என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்