- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை எதிர்க்கிற நடிகர் விஜய், அவர் கட்சி மேடையில் இப்படி ஒரு விஷயத்தை பண்ணலாமா?...

அந்த விஷயத்தை எதிர்க்கிற நடிகர் விஜய், அவர் கட்சி மேடையில் இப்படி ஒரு விஷயத்தை பண்ணலாமா? – விளாசித் தள்ளிய இயக்குனர் பேரரசு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. இவர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி ஆகிய 2 படங்களை இயக்கியவர். இந்த 2 படங்களுமே விஜய்க்கு மாஸ் ஹிட் படங்களாக அமைந்தன. அதுவும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய திருப்பாச்சி படம் பெரிய அளவில் விஜய்க்கு வெற்றியை கொடுத்தது.

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த வாரத்தில் மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் ரிசார்ட் ஒன்றில் தவெக கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்துக்கொண்டார்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய தவெக கட்சியின் தலைவர் விஜய், மும்மொழி கொள்கையை ஆதரிக்காத மாநில அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மறுப்பதும், அதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பதும் எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வது போல இருக்கிறது என்று கிண்டலடித்தார்.

ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டு நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழுவற மாதிரி அழு என்பதை போல இவர்கள் செய்வதை எல்லாம் நாங்க நம்பணுமா, மக்கள் நம்பணுமா என்றும் கேள்வி எழுப்பிய அவர், இவ்வளவு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும் போது டிவிரிட்டரில் ஹேஷ்டாக் போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க, என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இயக்குனர் பேரரசு கூறியிருப்பதாவது, விஜய் சார் கடைநிலை தொண்டனை கூட மேடையில் உட்கார வைத்திருக்கலாம். ஆனால் பிரசாந்த் கிஷோரை மேடையில் உட்கார வைத்திருக்க கூடாது.

அவர் கூலிக்கு வேலை செய்யும் ஒருவராக இருக்கிறார். கடந்த முறை திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்காக வேலை செய்தார். இப்போது விஜய் கட்சிக்கு பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்கிறார். மும்மொழிக்கு எதிராக விஜய் பேசிக்கொண்டு ஒரு இந்திக்காரனை மேடையில் உட்கார வைத்தது பெரிய தவறு, என்று இயக்குனர் பேரரசு நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்