- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் விஜய் இப்படி தான் நடந்துக்குவாரா? பல உண்மைகளை போட்டுடைத்த பிரபல...

தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் விஜய் இப்படி தான் நடந்துக்குவாரா? பல உண்மைகளை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கியவர். இவரது படத்தின் பெயர்கள் எல்லாம் ஊர் பெயர்களாக இருப்பது இவரது மற்றொரு சிறப்பு. இதில் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி 2 படங்களுமே பெரிய வெற்றிப் படங்களான இருந்தன.

நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்கியது குறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத்குமார், சூர்யா என பல நடிகர்களை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நடிகர் விஜயை அவரிடம் திருப்பாச்சி கதையை சொல்லப் போகும்போதுதான் நேரடியாக பார்க்கிறேன். அதனால் மனசுக்குள் ஒரு பதட்டம், பரபரப்பு இருந்தது.

- Advertisement -

அவரிடம் கதை சொல்லும்போது நம்பிக்கை இல்லை. எனினும் கதையை திருப்பாச்சி கதையை சொன்னேன். அவரிடம் எந்தவிதமான ஒரு ரியாக்சனும் இல்லை. அவரது முகபாவனைகளை வைத்து அவருக்கு படம் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதை கதை சொல்லும் இயக்குனரால் கணிக்கவே முடியாது. அவரது ரியாக்சன் சாதாரணமாகவே இருக்கும்.

காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என எதைப் பற்றி சொன்னாலும் முகத்தை சாதாரணமாக வைத்தபடியே கேட்டுக் கொண்டிருப்பார். நான் காமெடி காட்சியை சிரித்து சிரித்து சொன்னாலும் அவர் சிரிக்கவே மாட்டார். சென்டிமென்ட் காட்சியில் அழுது புரண்டு சொன்னாலும் சரி, விஜய் முகத்தில் எந்த ரியாக்சனும் இருக்காது.

- Advertisement -

நான் சொல்கிற கதை இவருக்கு பிடிக்கிறதா, பிடிக்கலையா என்று நான் கதையை சொல்லச் சொல்ல எனக்கு சந்தேகமும் குழப்பமும் வரும். பிறகு கதையை சொல்லி முடித்த பிறகு, ஹாலில் 5 நிமிடங்கள் வெயிட் பண்ணுங்க என்றார். சரியாக 5 நிமிடத்தில் ஹாலுக்கு வந்து விட்டார்.

நான் என்ன சொல்லப் போகிறாரோ என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு கைகொடுத்த விஜய், கதை நல்லா இருக்கு, நாம பண்ணுவோம் என்று மட்டுமே சொன்னார். அவ்வளவுதான். திருக்குறள் கூட ரெண்டு வரிகள் இருக்கும். ஆனால் விஜயிடம் வந்தது ரெண்டே ரெண்டு வார்த்தைகள்தான். அந்த சீன், இந்த சீன், தங்கச்சி சீன் என்று எதைப் பற்றியும் அவர் பேசவில்லை என்று இயக்குனர் பேரரசு அந்த நேர்காணலில் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்