பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1, விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் ஆகிய 4 படங்கள் வெளியாகின. இதில் விஜய் சேதுபதி படம், வந்த சுவடு தெரியாமல் வெளியேறி போய்விட்டது. ஏனெனில் ஏற்கனவே பிளாப் ஆன அந்த படத்தில் நடித்து, தன் இமேஜை மேலும் டேமேஜாக்கி கொண்டார் விஜய் சேதுபதி.
அயலான் படத்தை பொருத்தவரை, துவக்கத்தில் நல்ல ஓப்பனிங் இருந்தாலும் ஓரிரு நாட்களிலேயே அந்த படத்துக்கு போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை குறிப்பாக கேரளாவில் இந்த படத்தை பார்க்க குழந்தைகள் கூட ஆர்வம் காட்டவில்லை. ஏலியன் இருந்தும், படம் எந்த விதத்திலும் ரசிகர்களை அது கவரவில்லை.
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடித்திருந்தும் படம் முழுக்க வன்முறை காட்சிகளே மிகுதியாக இருந்ததால், பலரும் கேப்டன் மில்லர் படத்தை எதிர்மறையாகவே விமர்சித்தனர். ஆனால் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறது. கேரளாவில் 2 கோடி ரூபாய்க்கு இந்த படத்துக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான சாப்டர் 1 படத்துக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 80 தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்ததுதான். ஆனால் மிஷன் சாப்டர் 1 படம் பார்த்த ரசிகர்கள், படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இதையடுத்து, தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இப்போது பொங்கல் ரிலீஸில் முன்னணியில் இருப்பது மிஷன் படம்தான். இப்படி நல்ல படத்தை ஏன் இப்போது வெளியிட்டீர்கள் என, படத்தின் தயாரிப்பாளரை கேட்ட போதுதான் விஷயம் தெரிய வந்திருக்கிறது.
அதாவது பொங்கலுக்கு வர வேண்டிய அரண்மனை 4, லால் சலாம் வெளிவராததால் அந்த படங்களை வெளியிட வேண்டிய ரெட் ஜெயின்ட் மூவிஸ் கட்டாயப்படுத்தி, மிஷன் சாப்டர் 1ஐ வெளியிட்டுள்ளனர். ரிலீஸ் ஆகாத அந்த படங்களால், இந்த படம் இப்போது வெளிவந்து, போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் சிக்கி திணறியிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.





