- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க எம்ஜிஆர் மாதிரி இருக்கறீங்க… அஜீத்குமாரை நேரில் பார்த்த போது சொன்ன பிரபல இயக்குனர் -...

நீங்க எம்ஜிஆர் மாதிரி இருக்கறீங்க… அஜீத்குமாரை நேரில் பார்த்த போது சொன்ன பிரபல இயக்குனர் – அதற்கு ஏகே சொன்ன பதில்தான் ரொம்பவும் ஹைலைட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் நடிகைகள் இயல்பிலேயே நல்ல அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் மேக்கப் போட்டால் மட்டுமே கொள்ளை அழகாக காட்சியளிப்பார்கள். மேக்கப்பை கலைத்து விட்டால் அவரா இவர் என ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தோற்றம் மாறிவிடும்.

அந்த வகையில் நடிகர்களில் கமல்ஹாசன் அரவிந்த் சாமி அஜீத்குமார் போன்றவர்கள் இயல்பிலேயே நல்ல நிறமும் அழகும் கொண்டவர்கள். மிக சாதாரணமான உடையில் மேக்கப் இல்லாமல் இருந்தால் கூட அவர்களை பார்க்கும் போது ஆணழகன் போல காட்சியளிப்பார்கள் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

குறிப்பாக நடிகர் அஜீத்குமார் ஒரு காலகட்டத்தில் மிகவும் அழகான இளைஞராக தமிழ் சினிமாவில் பெண் ரசிகைகளின் மனங்களை கொள்ளையடித்தவர். அதிலும் ஆசை காதல் கோட்டை அமர்க்களம் போன்ற படங்களில் அவர் நடித்த போது, அஜீத்குமார் போல மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் நிறைய பேர் என்றால் அது மிகையல்ல.

ஆனால் இப்போது 50 வயதுகளை கடந்துவிட்ட நடிகர் அஜீத்குமார், கடந்த பல ஆண்டுகளாக வெள்ளை தலைமுடி தாடி மீசையுடன்தான் படங்களிலும் நடிக்கிறார். பொது நிகழ்வுகளிலும் காணப்படுகிறார். படத்தில் தவிர்க்க முடியாத நிலையில் பாடல் காட்சிகளில், பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே கிளீன் ஷேவ் செய்து டை அடித்த ஹேர் ஸ்டைலுடன் நடிக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி ரன் பையா போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர். திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பல படங்களையும் சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார். ஒருமுறை நடிகர் அஜீத்குமாரை லிங்குசாமி நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரது தோற்றம் குரலை பார்த்து லிங்குசாமி அசந்து போய் இருக்கிறார்.

அதனால் நடிகர் அஜீத்குமாரிடம் இயக்குனர் லிங்குசாமி மிகவும் வெளிப்படையாக, நீங்கள் எம்ஜிஆர் போல இருக்கறீங்க என்று புகழ்ந்து கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த நடிகர் அஜீத்குமார், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க, என்று உடனடியாக கூறியிருக்கிறார். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார். எப்போதுமே ஏகே எளிமையானவர்தான், தனக்கு அந்த தகுதியே இருந்தாலும் அந்த புகழை விரும்பாதவர் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்