- Advertisement -
நடிகர் ரிஷிகாந்த் நடிகை அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் மொத ராத்திரி. இந்த படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமியும் இந்த படத்தில் நாயகியின் காதலராக நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் ராஜா கருப்பசாமி ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவும் ராஜா கருப்பசாமி கமிட் செய்யப்பட்டுள்ளார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி. 2வது படத்தில் ஹீரோ 3வது படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் என இயக்குனர் ராஜா கருப்பசாமியின் லைன் அப் வேற லெவலில் ஜாக்பாட் அடித்தது போல மாறியிருக்கிறது.





