- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, நான் அதிகமாக பாட்டு எழுதியது இளையராஜாவுக்கா? இல்லை. நான் அதிகமாக பாட்டு எழுதிய ஏஆர் ரகுமானுக்கா? இல்லை. டிஎம் சௌந்தர்ராஜன் அதிகமாக பாடியது எம்ஜிஆருக்கா? இல்லை சிவாஜிக்கா? இல்லை. டிஎம் சௌந்தர்ராஜன் அதிகமாக பாடியது ஜெய்சங்கருக்கு. நான் அதிகமாக பாட்டு எழுதியது தேவாவுக்கு. அவர்தான் சின்ன தயாரிப்பாளர் முதல் பெரிய தயாரிப்பாளர் வரை தன் அன்பால் கட்டிப் போட்டு இருந்த ஒரு நல்ல மனிதர். அதனால் அவரை பள்ளம் நோக்கி சென்ற வெள்ளம் போல தமிழ் திரையுலகம் பாய்ந்து சென்றது என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.





