ஒரு நல்ல திரைப்படம் அதற்கான வெற்றியை தானாக தேடிக்கொள்ளும் என்ற பொன்மொழியை நிஜமாக்கும் வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த மொத ராத்திரி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.
திருமணத்தில் விருப்பமே இல்லாத ஆணும் பெண்ணும் உறவுகளின் கட்டாயத்தில் திருமண வாழ்வில் இணைகின்றனர். மொத ராத்திரியில் தன் மனைவி முன்னாள் காதலனுடன் செல்ல முயற்சிப்பது கணவனுக்கு தெரிய வருகிறது. அவளை காதலனுடன் அனுப்பி வைக்க முன்வரும் போது, காதலன் என்னால் உன்னை வசதியாக வாழ வைக்க முடியாது என விட்டு விட்டு போய்விடுகிறான். மீண்டும் அந்த கணவன் மனைவி இணைந்தார்களா என்பதே கதை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி கூறியதாவது, மொத ராத்திரி படத்தை தயாரிப்பதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூவி ஓகே சொல்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, இந்த படத்துல நான் வேணாண்டா. நீ வேற யாரையாவது வெச்சு பண்ணிக்க என்று ரிஷிகாந்த் என்னிடம் சொல்லிட்டார்.
அப்போ ரொம்ப எமோஷனலா சொன்னார். எனக்கு தெரிஞ்சு இதுக்கு மேல ரிஷிகாந்த் அப்படீங்கற பெயர் பெரிய அளவுல ரீச் ஆகறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டார். எவ்வளவு நாள் போராடறது? தட்டாத கதவு இல்லை. கதை நல்லா இருக்குப்பா, ஹீரோவை மட்டும் மாத்துன்னு பல தயாரிப்பாளர்கள் சொல்லிட்டாங்க.
பெரிய தொகை தருகிறேன் என்று சில தயாரிப்பாளர் சொன்னாலும் நான் ஹீரோவை மாத்தலே, அவரும் வேறு டைரக்டர் தேடி போகலே. ரெண்டு பேருமே ஒண்ணுல உறுதியா இருந்தோம். என்னோட முதல் படம் அவர்தான் ஹீரோ. அவரோட படத்துக்கு நான்தான் டைரக்டர். இதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தோம்.
ஆனா எங்க ரெண்டு பேருக்கும் அண்ணன் தம்பி மாதிரி அடிக்கடி சண்டை வரும். எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். கதை டிஸ்கஷன்ல சண்டை வரும். ரெண்டு பேரும் பேசிக்காமல் இருப்போம். இந்த படத்தை விட டோரதி படத்துல இன்னும் அவரோட நிறைய பொடஷன்சியல் பார்ப்பீங்க. அப்படி ஒரு ரிஷிகாந்தை பார்ப்பீங்க என்று இயக்குனர் ராஜா கருப்பசாமி கூறியிருக்கிறார்.





