- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கட்சி வேட்பாளராக தேவயானியை நிறுத்த என்னிடம் பேசினார்கள் - இயக்குனர் ராஜகுமாரன் போட்டாரே ஒரு...

அந்த கட்சி வேட்பாளராக தேவயானியை நிறுத்த என்னிடம் பேசினார்கள் – இயக்குனர் ராஜகுமாரன் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர கதாநாயகியாக கடந்த 1990களில் வலம் வந்தவர் தேவயானி. காதல் கோட்டை சூரியவம்சம் பிரண்ட்ஸ் தெனாலி மூவேந்தர் நினைத்தேன் வந்தாய் என பல வெற்றிப் படங்களில் தேவயானி நடித்திருந்தார். குடும்பப்பாங்கான கேரக்டர் என்றால் அதில் முதல் சாய்ஸ் ஆக அப்போது தேவயானி இருந்தார்.

நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் படங்களில் இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்தார். அப்போது அவருக்கும் தேவயானிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இப்போதும் தேவயானி பிஸியாக சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேவயானியை அந்தியூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்கு அந்த கட்சி முயற்சி செய்தது. ஆனால் எனக்கு அரசியல் தெரியும் என்பதால் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

தேர்தலில் நின்று வெல்வதை விடவும் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக வெல்ல வேண்டும். அப்போதுதான் தொகுதியில் மக்களுக்கான நல்ல விஷயங்களை வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. அந்த கட்சி சார்பில் எங்களிடம் பேச்சு நடத்த முயற்சி செய்தார்கள்.

- Advertisement -

ஒரு முறை அந்தியூரில் வைத்து எங்களை கமல்ஹாசன் நேரில் சந்திக்க வருவதாகவும், உங்கள் வீட்டில் தான் கமல் உணவு அருந்தப் போகிறார் என்றும் தகவல் சொன்னார்கள். ஆனால் நாங்களோ, இல்லை சார். சென்னைக்கு கிளம்பிட்டோம். சாவியை கொடுத்துவிட்டு நாங்கள் போகிறோம். கமல் சார் இங்கு வந்தால் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

அரசியல் நிமித்தமாக அவர் எங்களை சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைமை தான் தவெக கட்சிக்கும் வரும். அந்த கட்சியினர் எங்களை அழைத்தாலும் தலைகீழாக நின்றாலும் போக மாட்டோம் என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்