தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகனான தளபதி விஜய் அண்மையில் லியோ படத்தின் படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பெரிய விழாவையே நடத்தி முடித்திருந்தார். மேலும் லியோ படமத்திற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வேளையில் இதற்கிடையில் நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை துவங்க இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் லியோ படத்தின் வெளியிட்டுருக்கு பிறகே விஜய் தனது அரசியல் பயணம் குறித்த முக்கிய முடிவைகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இந்த “லியோ” படத்தில் அவருடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், சாண்டி என பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இந்த லியோ படத்தின் சிங்கிள் ட்ராக் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருக்கும் வேளையில் அடுத்ததாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படும் வேளையில் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் விஜய் வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி அவர் எங்கு சென்றுள்ளார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும் இடத்தில் விஜய் நின்று கொண்டிருக்கும் படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர் சுற்றுலா சென்று வந்த பின்னர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் அதன் பிறகு அவரது கட்சி குறித்த சில தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு விஜய் ஒருவேளை அரசியலில் ஈடுபட்டால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்வார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.





