- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படம் வெற்றிக்கு சிவகார்த்திகேயனோ பயோபிக் என்பதோ காரணமே அல்ல… போட்டுத் தாக்கிய இயக்குனர் ராஜகுமாரன்!

அமரன் படம் வெற்றிக்கு சிவகார்த்திகேயனோ பயோபிக் என்பதோ காரணமே அல்ல… போட்டுத் தாக்கிய இயக்குனர் ராஜகுமாரன்!

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். சிவகார்த்திகேயன் சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் கதை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன். நீ வருவாய் என படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர் பிறகு அவர் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் போன்ற படங்கள் சரியாக போகவில்லை. கடுகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

சமீபகாலமாக சினிமாவில் வாய்ப்பே இல்லாத இயக்குனர் ராஜகுமாரன் தொடர்ந்து யூடியூப் சேனல் நேர்காணல்களில் பங்கேற்று பேசி வருகிறார். நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் துருவ் விக்ரம் சியான் விக்ரம் விஜய் இயக்குனர் மகேந்திரன் என பிரபல திரைக்கலைஞர்கள் குறித்து கடும் விமர்சனங்களை அவர் முன்வைப்பது கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் அமரன் படம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 1960களில் வந்த சிவாஜி கணேசன் நடித்த படம் ரத்த திலகம். அதுதான் அமரன் படம். ஒரு சீன் கூட புதுசு கிடையாது. ஒரு விஷயம் புதுசு கிடையாது. படம் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கதையும் எந்த பாயிண்டும் தெரியக்கூடாது.

- Advertisement -

ஆனால் அமரன் படம் பார்க்கும் ஓபனிங்கின் போதே ஹீரோ இறந்துவிடுவார் என்பது முன்பே தெரிந்து விட்டது. அப்போ ஹீரோ இறந்து விடுவான் என்று தெரிந்தும் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக அந்த படத்தை போய் பார்க்கும் மக்களின் மனநிலை என்ன? நீங்க எப்படிப்பட்ட ஆளுங்க?

அந்த படத்தில் இருந்த ஒரே விஷயம் சாய்பல்லவி. சாய்பல்லவியை விதம் விதமாக ரசிச்சு பார்க்க தான் அமரன் படம் பார்க்க எல்லோரும் போனாங்க. இதுதான் உண்மை என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். சாய் பல்லவிக்காக தான் அந்த படமே ஓடியது. சிவகார்த்திகேயனோ அது பயோபிக் படம் என்பதோ காரணமில்லை என்று கூறிய ராஜகுமாரன், அது 1960களில் வெளிவந்த ரத்த திலகம் படம் என்றும் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்