- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் பேமிலி படத்தை பார்க்காம யாரும் தவற விட்டுடாதீங்க… சொன்னது அந்த பிளாக்பஸ்டர் ஹிட் டைரக்டரா?...

டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்க்காம யாரும் தவற விட்டுடாதீங்க… சொன்னது அந்த பிளாக்பஸ்டர் ஹிட் டைரக்டரா? – ஆச்சரியத்தில் வாயடைத்துப் போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 100 படங்கள் வருகிறது என்றால் அதில் 90 படங்கள் ஹீரோயிசம் பேசும் படங்களாக தான் வருகின்றன. அடிதடி கத்தி ரத்தம் வன்முறை பழிவாங்கல் போன்ற சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் படத்தை பார்த்து பார்த்து ரசிகர்கள் அலுத்து சலித்து போகின்றனர்.

எந்த இயக்குனரும் கதையை நம்பி படம் எடுக்காமல் ஹீரோவுக்காக மட்டுமே படம் எடுப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டது. யதார்த்த சினிமாவை தொலைத்து விட்டு தவித்து நிற்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் தருவது போல காக்கா முட்டை பார்க்கிங் சித்தா குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் போன்ற படங்கள் வெளிவருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டூரிஸ்ட் பேமிலி. 24 வயதான இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த படத்தில் சசிக்குமார் சிம்ரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய டைரக்டர் ராஜமவுலி, டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், டூரிஸ்ட் பேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். இந்த படத்தில் மனதை தொடும் காட்சிகளும் எலும்புகளை கூச வைக்கும் நகைச்சுவையும் நிறைந்துள்ளது.

இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. அபிஷன் ஜீவிந்த் சிறப்பாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவம் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க தவற விடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து இயக்குனர் ராஜமவுலிக்கு டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நன்றி தெரிவித்து அவர் செய்த பதிவில், இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. அவருடைய படங்களை நான் வியந்து பார்த்தேன். அந்த உலகங்களை உருவாக்கிய ஒருவர் ஒருநாள் என் பெயரை கூறுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. ராஜமவுலி சார் நீங்கள் இந்த பையனின் கனவை வாழ்க்கையை விட பெரிதாக்கி விட்டீர்கள் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சற்று முன்