- Advertisement -
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் பாக்கெட் நாவல். இந்த படத்தில் இசையமைக்க இளையராஜா தான் முதலில் கமிட்டாகி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு தற்போது ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் சர்ச்சையான கதை அமைப்பைக் கொண்ட படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று இளையராஜா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் வெளியான டோரதி படத்துக்கு இளையராஜா இசையமைத்தது குறித்து விமர்சனம் எழுந்தது. ஆனால் அதே நேரத்தில் பாக்கெட் நாவல் படத்தின் கதைக்கேற்ப இளையராஜா இசை இல்லை என்பதால் ஜீவி பிரகாஷ் குமார் மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.





