- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் - மம்முட்டி கேரக்டர் அதுவா? லேட்டஸ்ட் அப்டேட்டுகளை...

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் – மம்முட்டி கேரக்டர் அதுவா? லேட்டஸ்ட் அப்டேட்டுகளை அள்ளித் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவரது அப்பா கஸ்தூரிராவும் அண்ணன் செல்வராகவனும் திரைப்பட இயக்குனர்கள். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள். அவர்களும் இப்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை அவரே இயக்கி உள்ளார் அதில் ராயன் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இது தனுஷின் 55வது படமாகும். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் ஓம் படத்தில் ஸ்ரீ லீலா சாய் பல்லவி என இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்முட்டி இந்த படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ஓம் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் படம் குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்டுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அந்த விழாவில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஓம் என்ற தலைப்புடன் தற்போது படம் 65 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். ஓம் என்பது ஒரு தெய்வீக தலைப்பு. அந்த தலைப்புக்கு ஏற்ற வகையில் இந்த படம் உருவாகி வருகிறது. கருப்பு படத்தின் எடிட்டர்தான் இந்த படத்திலும் எடிட்டராக பணி செய்கிறார்.

ஓம் படத்தில் தனுஷ் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கமர்சியல் மற்றும் எமோஷனல் அம்சங்களை இணைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஓம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் மம்முட்டி கார்த்திகேயன் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்று அந்த விழாவில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்