- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தைப் பார்த்துவிட்டு கமல் கூறியது என்ன... மனம் திறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி...

அமரன் படத்தைப் பார்த்துவிட்டு கமல் கூறியது என்ன… மனம் திறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி…

- Advertisement -

மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்றது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் அவர் வீர மரணம் அடைந்த நிலையில், அவரது பயோபிக்கை தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில் டீசரும் அமைந்தது. அதில் ஆக்ரோஷமாக பேசி கர்ஜிக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் முகுந்தன் என்று தெரிவிக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க அமரன் திரைப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

- Advertisement -

இதனிடையே தனது அடுத்த திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகும் இதனை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். ருக்மணி வசந்தா என்பவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமரன் திரைப்படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு ஜாலியான மனிதர் அதேசமயம் கதையுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் உணர்வுபூர்வமாக இருப்பார். அவரை ராணுவ வீரராக காட்டுவது எளிதாக இருந்தது இதற்காக அவர் மும்பையில் பயிற்சிகளை மேற்கொண்டார். படத்தில் சாய் பல்லவிக்கும் சேலஞ்சான கதாபாத்திரமாக இருக்கும். படம் நன்றாக வந்திருப்பதை பார்த்து கமல் சார் மகிழ்ச்சி அடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்