கடந்த 2024ம் ஆண்டு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான தேவரா படத்தில் வரும் சுட்டமல்லி பாடல் காட்சிகளை சிலர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக உருவாக்கி வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதுகுறித்து பேசிய நடிகர் ஜூனியர் என்டிஆர், இது அருவருக்கத்தக்க வெட்கக் கேடான ஒரு செயல் என்று குற்றம் சாட்டி குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்து இருந்தார். ஏஐ தொழில் நுட்பம் தவறாக பயன்படுத்துவதை கண்டித்த பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சட்டத்துறைகளும் தெலுங்கு சினிமா அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா இது போன்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பாலியல் வன்கொடுமைக்கு சமமானது என்று ஒரு பதிவில் கண்டித்து இருந்தார். இப்படி பிரபல நடிகை ஜான்வி கபூர் குறித்து செயற்கை நுண்ணறிவு மூலம் போலியாக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோவுக்கு தெலுங்கு சினிமா துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான போரில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீங்கள் அதனுடன் இணைந்து போய்விட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருக்கிறார்.
அதில், செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான போரில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீங்கள் அதனுடன் இணைந்து போய்விட வேண்டும். அதற்கு எதிராக நீங்கள் போராடினால் அது உங்களை அழித்து விடும். அதிகமாக பிரபலப்படுத்தி கோடிக்கணக்கான மக்கள் அதனை பார்க்க வைப்பதில் இந்த பிரபாகங்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து அதை வெளிப்படுத்தி இருப்பது தான் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்கும்.
அதற்கு பதிலாக இவர்கள் செய்தது எல்லாம் டிவீட் செய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளம் குற்றச்செயலான அந்த ஆட்சேபத்திற்குரிய வீடியோ மீது அதிக கவனம் ஈர்க்க வைத்ததுதான் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பல நடிகர் நடிகர்கள் தங்களை எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து இருந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்து இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.





