- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் - தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? டைரக்டர் ஆர்ஜே பாலாஜி...

கருப்பு படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் – தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? டைரக்டர் ஆர்ஜே பாலாஜி சொன்ன தகவல்!

- Advertisement -

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறாத இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கருப்பு என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்தார்.

இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கிய இந்த படம் நடிகர் சூர்யாவின் 45வது படமாகும். மௌனம் பேசியதே ஆறு படங்களை தொடர்ந்து இந்த படத்தில் சூர்யாவுடன் மீண்டும் திரிஷா நடித்திருக்கிறார். மேலும் ஷிவதா சுவாசிகா மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் மன்சூர் அலிகான் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் சூர்யா அய்யனார் சாமியாகவும் வக்கீல் கேரக்டரிலும் நடித்துள்ளார். மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஆர்ஜே பாலாஜியும் வக்கீலாக நடித்திருக்கிறார். இந்த படம் சூர்யாவுக்கு பெரிய வெற்றியைத் தரும் என்றும் கூறப்படுகிறது.

கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு இன்னும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இப்போதைக்கு பைசன் காளமாடன் டீசல் டியூட் ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்பது உறுதியாகி உள்ளது. கம்பி கட்ன கதை என்ற ஒரு படமும் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இளம் நட்சத்திரங்களின் படங்களே தீபாவளி களத்தில் குதிக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற கருப்பு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது, கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதால் படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முடியவில்லை.

கருப்பு படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். படத்தின் தயாரிப்பாளருக்கும் படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. கருப்பு படத்தின் முதல் பாடலை வருகிற தீபாவளிக்கு வெளியிடுகிறோம் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார். தீபாவளிக்கு கருப்பு படம் வெளியாகும் என எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு கருப்பு படத்தில் இருந்து பாடல் மட்டுமே வெளியாகும் என்ற தகவல் ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்