- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் நடிக்கும் நடிகர் நாகார்ஜூனாவின் சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளந்த தமிழ்...

கூலி படத்தில் நடிக்கும் நடிகர் நாகார்ஜூனாவின் சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளந்த தமிழ் சினிமா ரசிகர்கள் – நம்பவே முடியலையே பாஸ்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் ஒரு காட்சி வரும். அதில் நடிகர் நட்டி நடித்துள்ள ஒரு காட்சியில், என் பொழப்ப ஏன் கேக்குறே அத்தே, கடனை வாங்கி வீட்டை கட்டு, வீட்டை வித்து கடனை கட்டு என்கிற மாதிரிதான் இருக்கு, என்று குறிப்பிடுவார். பொருளாதாரத்தில் பல மனிதர்களின் வாழ்க்கை நிலை என்பது அப்படிதான் இருக்கிறது.

ஆனால் சினிமா நடிகர்களின் வாழ்க்கை மட்டும் கடந்த சில ஆண்டுகளாக வேற லெவலில் இருக்கிறது. அதுவும் ஹீரோக்களாக உள்ளவர்கள் வாங்குகிற சம்பளத்தை பார்த்தால், வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் சராசரி மனிதர்களாக இருப்பவர்கள், அதில் 100ல் 1 மடங்கு கூட சம்பாதிக்க முடியாதே என்ற வருத்தம்தான் ஏற்படுகிறது.

தமிழில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க ரூ. 140 கோடி வாங்கிக்கொண்டு இருந்தார். இனி தனது 172 படத்தில் இருந்து சம்பளத்தை 210 கோடியாக அதிகரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி வாங்குகிறார். விஜய் தி கோட் படத்தில் நடிக்க ரூ. 200 கோடி வாங்கியுள்ளார். விஜய் 69 படத்தில் நடிக்க ரூ. 250 கோடி சம்பளம் என்கின்றனர். அஜீத்குமார் 163 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

இந்த சம்பளம் என்றால் 3 மாதங்கள், 6 மாதங்களில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் நடிகைகளில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வாங்குகிறார் என்றும் நடிகை திரிஷா ரூ. 10 கோடி வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 25 லட்சம் என்றும், அதில் ரூ. 20 லட்சத்தை கணக்கில் வராத கருப்பு பணமாக வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 60 கோடி, அட்லி சம்பளம் ரூ. 100 கோடி, நெல்சன் சம்பளம் ரூ. 45 கோடி வைர வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சம்பளம் கோடிகளில் சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடியாக உள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் கூலி படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர் நாகர்ஜூனா சம்பளம் ரூ. 24 கோடி என்று தெரிய வந்துள்ளது. இவ்வளவு சம்பளமா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

சற்று முன்