- Advertisement -
Homeபொழுதுபோக்குபென்ஸ் காரை ஆசையா தொட்டு பார்த்தேன், காரோட ஓனர் ஓங்கி அறைஞ்சிட்டார் - பிரபல காமெடி...

பென்ஸ் காரை ஆசையா தொட்டு பார்த்தேன், காரோட ஓனர் ஓங்கி அறைஞ்சிட்டார் – பிரபல காமெடி நடிகர் வாழ்வில் நடந்த சம்பவத்தை சொன்ன ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது இவர் ஐபிஎல் கிரிக்கெட் மேட்களில் பரபரப்பாக பேசும் ஒரு ஆர்ஜேவாகவே இருக்கிறார். இவரது நான் ஸ்டாப் பேச்சை ரசிக்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நடிகர் ஆர்ஜே பாலாஜி 10க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த நிலையில் எல்கேஜி படம் மூலம் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து அவர் இயக்கிய நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது. சத்யராஜ் ஊர்வசி ஆர்ஜே பாலாஜி அபர்ணா முரளி உள்ளிட்டோர் நடித்த வீட்ல விசேஷம் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா நட்டி சுவாசிகா ஷிவதா மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கீன்றனர். இந்த படம் வரும் ஜனவரியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் மயில்சாமி பல படங்களில் ஆர்ஜே பாலாஜியுடன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிகள் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கூறியதாவது, நடிகர் மயில்சாமியுடன் ஒரு நாள் நான் பேசிட்டு இருக்கும்போது ஒரு விஷயம் பற்றி என்கிட்ட சொன்னார். யாரோ ஒருத்தரோட பென்ஸ் கார் பக்கத்துல நின்னு அதை மயில்சாமி சார் தொட்டு தொட்டு பார்த்துட்டு இருந்தாராம். அப்போது அந்த காரோட ஓனர் அங்க வந்து அவரை தள்ளி விட்டுட்டு கண்டபடி திட்டியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு அப்போ ஒரு மாதிரி அவமானம் ஆகி அழுதுட்டு இருந்திருக்கார். அப்போ சொந்தமா கார் வாங்கற அந்த அளவுக்கு அவர்கிட்ட வசதி இல்லை. டெய்லி சம்பளம் 1000 ரூபா 500 ரூபா என்றுதான் வாங்கிக் கொண்டிருந்தார். இதை எதுக்கு அவர் என்கிட்ட சொன்னார் என்றால், ஒருநாள் ஷூட்டிகுங் பென்ஸ் கார்ல வந்தார்.நான் பார்த்துட்டு, சார் சூப்பர் சார் கார் எப்போ வாங்குனீங்கன்னு கேட்டேன்.

என்னோட 50வது பிறந்தநாளுக்கு என்னோட மனைவி வாங்கி கொடுத்தாள் என்று சந்தோஷமா சொன்னார். அப்படியான்னு கேட்டேன். ஆமா ஒருவாட்டி பென்ஸ் காரை தொட்டுப் பார்த்தேன். அந்த கார் ஓனர் என்னை அடித்துவிட்டான். என் பொண்டாட்டி கிட்ட சொல்லி அழுதேன். அவதான் 50வது பிறந்தநாளுக்கு கார் வாங்கி கொடுத்தான்னு ரொம்ப பெருமையா சொன்னார் என்று இயக்குனர் ஆர்கே பாலாஜி அந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்