- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப் போகுது தெரியுமா? போட்றா வெடிய -...

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப் போகுது தெரியுமா? போட்றா வெடிய – பெரிய சம்பவம்தான், ஆனா அனிருத் பெரிய சிக்கலில் இப்போ இருக்காரே?

- Advertisement -

அமரன் படத்தை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள படம் மதராஸி. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் பிஸியாக இப்போது நடித்து வருகிறார். அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும் வெங்கட்பிரபு இயக்கும் ஒரு படத்திலும் குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் ஒரு படத்திலும் என பிஸியான லைன் அப்களில் இருந்து வருகிறார்.

- Advertisement -

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. வழக்கமாக சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்திலும் அல்லது சாய்ராம் பொறியியல் கல்லூரியிலும் தான் பல படங்களின் இசை வெளியீடு டிரெய்லர் வெளியீடு பிரமோசன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மதராஸி படத்தின் இசை வெளியீடு சென்னை மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடத்தவில்லை.

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடத்தப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு இந்த விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் மதராஸி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தரும் தேதிக்காக காத்திருக்கின்றனர். ஏனெனில் அவர்தான் இப்போது ஏகப்பட்ட பிஸியில் இருந்து வருகிறார். வருகிற ஜூலை 31ம் தேதி வெளியாக உள்ள கிங்டம் படம் மற்றும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள கூலி ஆகிய 2 படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.

- Advertisement -

இந்த 2 படங்களையும் அவர் முடித்தாக வேண்டும். அடுத்தாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லைக் படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். அடுத்து மதராஸி படத்துக்கும் ரீ ரிக்கார்டிங் பணிகள் உள்ளது. இப்படி 4 படங்கள் அடுத்தடுத்து முடிக்க வேண்டிய முக்கிய படங்களாக இருப்பதால், லண்டன் இசை வெளியீட்டு விழாவுக்கு அனிருத் உடனே சம்மதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மதராஸி படத்தின் இசையமைப்பாளர் என்பதால் கண்டிப்பாக அதில் அவர் கலந்துக்கொள்வது முக்கியம். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனாக இருந்தாலும் லண்டனில் நடக்க உள்ள மதராஸி படத்தின் இசை வெளியீடு விழாவின் நாயகனே அனிருத் தான் என்பதால், அனிருத் லண்டனுக்கு வந்தாக வேண்டிய சூழலில் அவரது தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.

- Advertisement -

சற்று முன்