- Advertisement -
Homeபொழுதுபோக்குவளர்ந்த பிறகும் இப்படியே பணிவா இருங்க - நடிகை நயன்தாராவுக்கு நாசூக்காக சூடு வைத்தாரா...

வளர்ந்த பிறகும் இப்படியே பணிவா இருங்க – நடிகை நயன்தாராவுக்கு நாசூக்காக சூடு வைத்தாரா இயக்குனர் ஆர்கே செல்வமணி?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2017ம் ஆண்டு துவங்கி, 2023ம் ஆண்டு வரை இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 2024ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இனி விஜய் சேதுபதிதான் இந்நிகழ்ச்சியின் நிரந்தர தொகுப்பாளர் என விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேன் ராவ். இவர் தற்போது டி ஆர் பாலா தயாரித்து இயக்கிய ஜின் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பவ்யா திரிகா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி பாலசரவணன் இமான் அண்ணாச்சி வடிவுக்கரசி வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு திகில் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. விவேக் மற்றும் மெர்வின் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கின்றனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, ஜின் படம் நன்றாக வந்திருக்கிறது. படத்துக்கு கதாநாயகிகளை தேர்வு செய்யும் போது முதலில் நாங்கள் பார்ப்பது அவர்களின் கண்கள். அடுத்தது அவர்களது சிரிப்பு. இந்த இரண்டும் அழகாக இருந்தது என்றால் பார்வையாளர்களை நன்றாக கவர வைக்கும்.

- Advertisement -

கண்கள் சிரிப்பு இந்த இரண்டுமே ஜின் படத்தின் கதாநாயகியான பவ்யா திரிகாவிடம் இருக்கிறது. நிச்சயமாக தென் இந்திய திரை உலகில் அவருக்கு பெரிய இடம் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் வளர்ந்த பிறகு இதே மாதிரி நட்பாகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர் கே செல்வமணி பேசியிருக்கிறார்.

சமீபமாக நயன்தாரா போன்ற சில முன்னணி நடிகைகள் ஓவராக கண்டிஷன்களை போட்டு இயக்குனர்களை தயாரிப்பாளர்களை பாடாய்படுத்துவதாக தகவல்கள் பரவுகின்றன. படப்பிடிப்பு தளங்களில் அவர்களது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், இயக்குனர் ஆர் கே செல்வமணி இப்படி ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்