- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டது… கூலி படத்தை மறைமுகமாக தாக்கிய இயக்குனர் ஆர்கே...

தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டது… கூலி படத்தை மறைமுகமாக தாக்கிய இயக்குனர் ஆர்கே செல்வமணி வேதனை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. குறிப்பாக அவர் இயக்கிய செம்பருத்தி ராஜமுத்திரை புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் மக்கள் ஆட்சி போன்ற படங்கள் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றவை. இப்போது பெப்சி திரைப்பட தொழிலாளர் அமைப்பின் தலைவராகவும் ஆர்கே செல்வமணி இருந்து வருகிறார்.

நடிகர் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் இந்த படத்தை உருவாக்கி இருந்தார். இந்த படத்தில் வீரபத்ரன் என்ற என்ற கேரக்டரில் வில்லனாக மன்சூர் அலிகான் அறிமுகமாகி இருந்தார்.

நாளை 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் படம் தமிழ்நாட்டில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் தரத்தில் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் நடிகர் விஜயகாந்துக்கு மட்டுமின்றி மன்சூர் அலிகான் சரத்குமார் ரம்யாகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் மிக முக்கியமான ஒரு படமாக அவர்களது சினிமா பயணத்தில் அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, ஒருவர் 100 கோடி சம்பளம் வாங்கி விட்டால் உடனே எனக்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து விட்டால் உடனே என் படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒரு நல்ல படம் நிச்சயமாக ஓடும். ரசிகர்களுக்கு அதுபோன்ற படங்களையே தரவேண்டும். என் படம் ஓட வேண்டும் என நினைக்கலாம். ஆனால் அதையும் தாண்டி மற்றவர்கள் நடித்த படம் ஓடிவிடக்கூடாது என்று நினைப்பது சரியல்ல. இந்த நோய்தான் இன்று தமிழ் சினிமாவை அழிக்கிறது. ஒரு படம் நிறைய வசூலிக்கலாம். அதே சமயம் அதிக வசூல் செய்த படம் நல்ல படமாகி விடாது என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் வசூல் ரீதியாக 4 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கிறது. அதை தான் இயக்குனர் ஆர்கே செல்வமணி, ஒரு படம் நிறைய வசூலிக்கலாம். அதிக வசூல் செய்த படம் நல்ல படமாகி விடாது என்று சுட்டிக்காட்டியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்