- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு நாங்கள் ஆதரவாக நிற்போம் - ரஜினிகாந்த் பட இயக்குனர் பரபரப்பு பேச்சு!

நடிகர் விஜய்க்கு நாங்கள் ஆதரவாக நிற்போம் – ரஜினிகாந்த் பட இயக்குனர் பரபரப்பு பேச்சு!

- Advertisement -

கரூரில் வேலுசாமிபுரம் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது.

இந்நிலையில் மகிழினி கலைக்கூடம் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ்பாரதி இயக்கத்தில் உருவான படம் வீர தமிழச்சி. இந்த படத்தில் சஞ்சீவ் வெங்கட் இளயா சுஷ்மிதா சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார் மற்றும் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மட்டும் டிரெய்லரை வெளியிட்டனர். வீர தமிழச்சி திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஆர்வி உதயகுமார் கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசினார்.

அப்போது இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறியதாவது, கடந்த இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை. கரூர் சம்பவத்தில் விலை மதிப்பில்லாத உயிர்களை இழந்திருக்கிறோம். பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கொஞ்சம் தூரத்தில் இருந்தே பாருங்கள்.

- Advertisement -

உயிரை இழந்தவர்களின் குடும்பங்கள் எப்படி தத்தளிக்கும், எவ்வளவு வேதனையில் இருப்பார்கள், இதையெல்லாம் பார்க்க விஜயின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும். இறந்தவர்களின் குடும்பங்களோடு சேர்ந்து விஜய்க்கு ஆதரவாக நிற்போம். யாரும் எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விபத்து. போன உயிர்களை இறைவனாலும் மீட்டெடுக்க முடியாது. இந்த மாதிரி நிகழ்வு எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும்.

அரசியல் தலைவர்களும் சரி கட்சி நிர்வாகிகளும் சரி காவல்துறையும் சரி ஒவ்வொரு தலைவர்களுக்கும் எவ்வளவு கூட்டம் கூடுகிறது, அதற்கு ஏற்ற மாதிரி இடங்களை ஒதுக்கி பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று திரையுலகம் சார்பாக நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த விழாவில் ஆர்வி உதயகுமார் பேசியிருக்கிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எஜமான் கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் கார்த்தி நடித்த கிழக்கு வாசல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்