- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை தூக்குகிறோம்... திடீரென அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இயக்குனர் செல்அம்......

மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை தூக்குகிறோம்… திடீரென அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இயக்குனர் செல்அம்… என்னடா இது மஞ்சள் வீரனுக்கு வந்த சோதனை…

- Advertisement -

நவீன யுகத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது செல்போனை பயன்படுத்தாதவர்களை தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும் எனும் நிலை உருவாகி இருக்கிறது என்றே கூறலாம். அது மட்டுமல்லாமல் அதில் இருக்கும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube போன்ற வலைதளங்களிலும் ஏராளமானோர் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

 

- Advertisement -

ஆரம்ப காலத்தில் இது வளர்ச்சி அடைந்து வந்த நேரத்தில், youtube களில் தங்கள் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ஃபாலோவர்களை பலரும் சம்பாதித்து வந்தனர். இதில் முக்கியமாக, இளைஞர் டிடிஎஃப் வாசனை நாம் கூறலாம்.

 

- Advertisement -

கொரோனா காலத்தில் தான் இவர் யார் என்று ஊரை அறிந்தது. மக்கள் அனைவரும் முகம் கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு ஒவ்வொரு விதிமுறைகளை விதித்து வந்த சூழலில், தனது பிறந்த பிறந்த நாளுக்காக பெரும் கூட்டத்தைக் கூட்டி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் டிடிஎஃப் வாசன்.

 

கோவை அருகே கூடிய பல இளைஞர்களும், டிடிஎஃப் வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒரு இளைஞருக்கு இவ்வளவு பெரிய கூட்டமா என்று பலரும் தேடிப் பார்த்த போது தான், அவர் youtube-ல் பைக் ஓட்டுவது தொடர்பான வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்கு பெயர் போன நபராகவும் அந்த இளைஞர் மாறினார்.

 

அதிவேகமாக பைக் ஓட்டுவது, அதனை இளைஞர்களிடம் கூறுவது என தப்பான முன் உதாரணமாக இருந்த டிடிஎஃப் வாசன் மீது ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தன. ஆனால் இதையெல்லாம் அந்த இளைஞர் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். காஞ்சிபுரம் அருகே ஒரு விபத்தில் வசிக்க அது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் டிடிஎப் வாசனின் ஓட்டுனர் உரிமத்திற்கு நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

 

இது ஒரு பக்கம் இருக்க டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். திரு வி க பூங்கா என்னும் திரைப்படத்தை இயக்கிய செல்அம் என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் திடீரென மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் அறிவித்துள்ளார். அவர் சூப்பர் ஸ்டார் தான் என்றும் ஆனால் படத்தில் இருந்து அவரை தூக்குவதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்அம்.

- Advertisement -

சற்று முன்