- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க வெச்ச கட்சி பெயரே பெரிய தப்பு, நடிகர் விஜய் மீது புதிய குற்றச்சாட்டை அடுக்கிய...

நீங்க வெச்ச கட்சி பெயரே பெரிய தப்பு, நடிகர் விஜய் மீது புதிய குற்றச்சாட்டை அடுக்கிய நாம் தமிழர் கட்சி சீமான் – ப்ரோ, இது செம காமெடி ப்ரோ…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது, மக்களுக்கு நல்லது செய்ய தம்பி விஜய் வரட்டும் என்று வரவேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த மாதம் 27ம் தேதி விஜய் அரசியல் மாநாடு நடத்திய பிறகு, அப்படியே மாறிப் போனார். விஜய் குறித்தும், விஜயின் கட்சி கொள்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

- Advertisement -

குடும்ப ஆட்சி நடத்தும் திமுக தான் என்னுடைய அரசியல் எதிரி என விஜய் அரசியல் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த நிலையில், திமுக தரப்பில் எந்த எதிர்விமர்சனமும் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் விஜய் குறித்து தொடர்ந்து வசைபாடி வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எல்லோரும் ஒண்ணுதான், பிரிவினையே கூடாது. நிலம், இனம், மொழி என்று யாரையும் பிரிக்க கூடாது. சரி அப்ப நீங்க என்ன பண்ணியிருக்கணும்? உலக வெற்றிக் கழகம் என்று நீங்க ஆரம்பிச்சிருக்கணும். எதுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று ஆரம்பித்தீர்கள். உங்களுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம், ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம். தென்மாநிலங்களில் எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

கேரளாவில் இந்த கட்சியை ஆரம்பித்திருக்கலாமே, நான் கேட்கறதுக்கு பதில் சொல்லணும். அடிப்படையே இல்லாமல் நீங்கள் பேசினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் தம்பி, தமிழக வெற்றிக் கழகம் ஏன் பெயர் வைக்கிறீர்கள்? உலக வெற்றிக் கழகம், அகில உலக வெற்றிக் கழகம் என்று பெயர் என்று பெயர் வைக்க வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜயை இளம்பெண்கள் அண்ணா என அழைக்கின்றனர். வயதான பெண்கள் மகன் என்கின்றனர். பாட்டிகள் என்னுடைய பேரன் என்கின்றனர். வயதில் சிறியவர்கள் ப்ரோ என்கின்றனர். விஜய் அவர்களை நண்பா, நண்பி என்கிறார். அப்படி தமிழ்நாட்டில் பாசமானவர்கள் இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்துள்ளார் என்று தளபதி ரசிகர்கள் அதற்கு பதிலடி விமர்சனம் தந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்