- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் விஜய்க்காக இயக்குனர்...

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – முதல்வர் விஜய்க்காக இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவு!

- Advertisement -

தென்மேற்கு பருவக்காற்று கண்ணே கலைமானே மாமனிதன் தர்மதுரை நீர்ப்பறவை கூடல் நகர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளராக உள்ள சீனு ராமசாமி தமிழக முதல்வர் விஜய்க்கு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் தமிழக அரசின் கவனத்திற்கு திரைப்படத் துறையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்த 6 முக்கிய கோரிக்கைகள் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகி போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அரசின் கவனத்திற்கு இந்த முக்கியமான 6 கோரிக்கைகளை கொண்டு வர விரும்புகிறேன்.

- Advertisement -

அரசு திரையரங்குகள் – கேரளாவின் கேஎஸ்எஃப்டிசி பாணியில் எளிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்காக அரசு திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இது தியேட்டர் கிடைக்காமல் முடங்கிப் போகும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக அமையும். திரைப்பட ரசனை கல்வி – பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி கொண்டுவரப்பட வேண்டும். சினிமாவை ஒரு கலையாக புரிந்து கொள்ளும் பக்குவத்தை இது இளம் தலைமுறைகளிடம் கொண்டு உருவாக்கும்.

உலக திரைப்பட மாநாடு – தமிழ் சங்க மாநாட்டை போல தமிழகத்தில் உலகளாவிய திரைப்பட மாநாடு நடத்தப்பட வேண்டும். இது தமிழ் திரை கலைஞர்களையும் உலகத்தரம் வாய்ந்த படைப்பாளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க முடியும். ஒற்றைச் சாளர அனுமதி – நமது பாரம்பரிய மற்றும் பண்பாட்டுத் தலங்களில் எளிதாக படப்பிடிப்பு நடத்த ஆன்-லைன் மூலம் முன் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

- Advertisement -

படப்பிடிப்பு தளங்களில் நிலவும் அதிகார சிக்கல்களையும் மறைமுக கையூட்டுகளையும் ஒழிக்க இதுவே சிறந்த வழியாகும். சுயாதீனத் திரைப்பட மானியம் – லண்டன் மகாராஷ்டிரா மாநிலங்கள் போல நட்சத்திர அந்தஸ்து இல்லாத எளிய திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு மானியம் வழங்கப்பட வேண்டும்.

கலைஞர்களுக்கான வீடுகள் – ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கான வீடுகள் தரும் பணியை விரைவுபடுத்தி தகுதியான கலைஞர்களுக்கு அவை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். லஞ்சத்தை ஒழிப்பது மட்டுமின்றி கலைத்துறையிலும் இத்தகைய கொள்கை ரீதியான மாற்றங்களை இந்த அரசு சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன் என்று இயக்குனர் சீனு ராமசாமி அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்