- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம் - முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்...

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம் – முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் கதாநாயகி அவரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஆனால் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தராமல் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இது ஷங்கர் இயக்கிய படம்தானா? என்ற விமர்சனத்தையும் ரசிகர்களிடையே கொண்டு வந்தது.

இந்த நிலையில் அவர் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை 3 பாகங்களாக மிக பிரமாண்டமான படங்களாக உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வராத நிலையில் ஷங்கர் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஏற்கனவே படங்களில் நடித்து வருகிறார். விருமன் படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக அவர் அறிமுகமாகி தொடர்ந்து மாவீரன் நேசிப்பாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய சில படங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதன்பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக அர்ஜித் பணிபுரிந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் அவர் உதவி இயக்குனராக பணி செய்தார்.

- Advertisement -

இப்போது அர்ஜித் இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவின் அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கான துவக்க விழா பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடிப்பதாகவும், வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியவர் அனுராக் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்