- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி கணேசன் நடித்த அந்த மாதிரியான கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் - பிரபல...

சிவாஜி கணேசன் நடித்த அந்த மாதிரியான கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் – பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு ஆசையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைக் கழகம் என்ற புகழுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றும் நடிப்பு என்றால் அது அவர்தான். அரசியலில் எம்ஜிஆரும் நடிப்பில் சிவாஜி கணேசனும் ஜாம்பவான்களாக அன்று முதல் இன்று வரை என்றுமே கொண்டாடப்படும் பெரிய ஆளுமைகளாக சரித்திரம் படைத்து விட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆருடன் படங்களில் நடிக்கவில்லை. ஏனெனில் ரஜினி நடிக்க வந்த போது எம்ஜிஆர் அரசியல் களத்தில் முதலமைச்சராகி விட்டார். அதனால் சிவாஜி கணேசனுடன் ரஜினிகாந்த் விடுதலை படிக்காதவன் படையப்பா போன்ற படங்களில் நடிக்கும் அற்புதமான வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதில் ரஜினிகாந்த் தயாரித்து ஸ்கிரிப்ட் எழுதிய படம் படையப்பா. இதுதான் சிவாஜி கணேசன் நடித்த கடைசி படமாக போய்விட்டது. எனினும் சிவாஜி நடித்த பல படங்களில் இன்னும் அவர் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசன் மலைச்சாமியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார்.

இந்த படத்தில் பரிசல் ஓட்டும் ராதாவுக்கும் அந்த கிராமத்து பண்ணையாளர் மலைச்சாமி என்கிற சிவாஜி கணேசனுக்கும் ஏற்படும் பழக்கமும் நட்பும் நாளடைவில் அது ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட நிலையில் காதலாக மாறும். பலரும் முதியவர் இளம்பெண் காதலாக தவறாக புரிந்துக்கொள்ளும் இந்த கதையை மிக நேர்த்தியான ஒரு அன்பு காவியமாக படைத்த பெருமை பாரதிராஜாவையே சேரும்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சுதா கொங்கரா முதல் மரியாதை படம் குறித்து பேசியிருக்கிறார். அவரது இயக்கத்தில் பராசக்தி படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சுதா கொங்கரா ரஜினி குறித்தும் முதல் மரியாதை படம் குறித்தும் தனது உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில் இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது எனக்கு ஒரு முழு நீள காதல் கதையை உருவாக்கும் ஆசை நீண்ட நாட்களாக உள்ளது. அதற்கான கதையும் தயாராக உள்ளது. திரைக்கதை மட்டுமே எழுத வேண்டியுள்ளது. நான் ரஜினியின் மிக தீவிரமான ரசிகை. ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற ஒரு படத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்