நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான படம் பராசக்தி. இது அவரது 25வது படம். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரெட்ஜெயின்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை.
பெரும்பாலான தியேட்டர்களில் பராசக்தி படம் பார்க்க கூட்டமே இல்லை. விஜய் ரசிகர்களின் தவறான விமர்சனங்களால் தான் இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்று பராசக்தி படக்குழுவினர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்த படம் ஒரு காட்டு மொக்கை, சர்க்கரை பொங்கலில் ரசம் ஊற்றியது போல உள்ளது என்று ப்ளு சட்டை மாறனும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பராசக்தி படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, ஒரு படத்தை அது சென்றடைய வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்ல முன்பே ஒரு குழுவாக பெரிய வேலை செய்ய வேண்டி உள்ளது, இந்த மார்க்கெட்டிங் யுகத்தில் படக்குழுவாக அதைச் செய்ய வேண்டும். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது.
பொங்கல் வார இறுதியில் படம் பெரும்பான்மையான ரசிகர்களை சென்றடையும் என்று நம்புகிறேன் என்று கூறிய சுதா கொங்கரா தொடர்ந்து பேசுகையில், சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர் இப்படி ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில், சென்சார் போர்டுல சர்டிபிகேட் வாங்குவது மட்டும் பெருசு இல்லை. அண்ணன் பேன்ஸ்கிட்ட சாரி கேட்டு மன்னிப்பு சர்டிபிகேட் வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி படம் ஓடும் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார் என்றார்.
இதை மேற்கோள் காட்டி பேசிய இயக்குனர் சுதா கொங்கரா, படம் வெளியாகாத நடிகரின் (விஜய்) ரசிகர்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் வருகின்றன. அவரது ரசிகர்கள் தான் இதை செய்கிறார்கள். இதுதான் நாங்கள் எதிர்த்து போராடும் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம் என்று கூறியிருக்கிறார். விஜய் ரசிகர்களை ரவுடிகள் என்று மறைமுகமாக சுதா கொங்காரா விமர்சித்தது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி தரும் விதமாக கமெண்ட் செய்துவரும் விஜய் ரசிகர்கள், சின்னக்கவுண்டர் படத்தில் ஒரு காட்சியில் அருவாளுடன் செல்லும் கேப்டன் விஜயகாந்த், தனது அக்கா மகளை வாழ்த்திவிட்டு வருவார். அப்போது தன் அம்மா மனோரமாவிடம் எனக்கு வேற வழி தெரியல ஆத்தா என்பார். அதனால் ஓடாத மொக்கை படத்தை எடுத்துவிட்டு படம் தோல்வி அடைந்த நிலையில் இப்போது சுதா கொங்கரா தளபதி ரசிகர்களின் பக்கம் திருப்பி விடுகிறார். இதற்கு வேற வழி தெரியல ஆத்தா என்று கேப்டன் பாணியில் சுதா கொங்கரா தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று கலாய்த்து வருகின்றனர்.





