தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக பெரிய வெற்றியை கண்டவர் சுந்தர் சி. அவரது மனைவி குஷ்பூ கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர். பிறகு அரசியல் ஆர்வம் காரணமாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தாவிய குஷ்பூ இப்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் எனப்படும் பழனிவேல்ராஜன் களத்தில் இருந்தார்.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்த போதே இந்த தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. அதனால் நான் தவெக கட்சி பற்றியோ அக்கட்சியின் தலைவர் விஜய் பற்றியோ எதுவும் பேச மாட்டேன். விமர்சிக்க மாட்டேன். ஏனென்றால் விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர். என் மனைவிக்கு தம்பி போன்றவர் என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.
இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மதுரை மத்திய தொகுதியில் கடும் போட்டியாளர்களாக இருந்த திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இயக்குனர் சுந்தர் சி இருவருமே ஜெயிக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரிச்சயமே இல்லாத தவெக வேட்பாளர் மதர் பதருதீன் என்பவர் 63,414 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதில் 2ம் இடத்தில் இருந்த திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் 44,286 ஓட்டுகளை பெற்றிருந்தார். அதாவது 19,128 ஓட்டுகளில் இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் மதர் பதருதீன் திமுக வேட்பாளர் பிடிஆரை தோல்வியடைய செய்து வெற்றி பெற்றார். இதில் 3ம் இடத்தில் இயக்குனர் சுந்தர் சி பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 33,538 ஆகும்.
அதாவது தவெக வேட்பாளரை விட சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று 3ம் இடத்துக்கு சுந்தர் சி தள்ளப்பட்டுள்ளார். அதே போல் திமுக வேட்பாளர் பிடிஆரை விட 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவான ஓட்டுகளில் சுந்தர் சி பின்தங்கியிருக்கிறார். இதுவரை 3 கட்சிகளில் பயணித்த குஷ்பு எம்எல்ஏ ஆகவில்லை. அவரது சுந்தர் சி நிச்சயம் எம்எல்ஏ ஆகி விடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.





