- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மையில் நடந்தது என்ன? அவருக்கு தெரியாது - நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு...

உண்மையில் நடந்தது என்ன? அவருக்கு தெரியாது – நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தந்த திடீர் விளக்கம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். அந்த படத்தை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ்பிக்சன் படத்தை வெங்கட்பிரபு இயக்க கமிட் ஆகியிருந்தார். தி கோட் படத்துக்கு பிறகு அந்த படத்தை அவர் டைரக்ட் செய்ய தயாராக இருந்தார்.

ஆனால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. அதன்பிறகு அமரன் படம் தந்த அபார வெற்றியால் பராசக்தி சேயோன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார் எனற விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அவர் கூறுகையில், வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தை நம்பி இருந்தான். அதனால தான் அவன் அடுத்த படம் லேட் ஆகுது. அந்த நடிகர் யாருன்னு நான் பெயரைச் சொல்ல மாட்டேன். அவரை குறை சொல்ல வேணாம். அவர் வாழட்டும். வெங்கட் பிரபு கதை எல்லாம் ரெடி பண்ணிட்டான். அந்த நடிகரும் கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த நடிகரோட ஒரு படம் ஹிட்டான உடனே அடுத்த இயக்குனரோட ரெண்டு படம் எடுத்துகிட்டு தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்று சொல்லிட்டார்.

அதை வெங்கட் பிரபுவுக்கு அனுப்பி இது உனக்கு தேவையா? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இதுக்கு மேல அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்ன உதாசீனப்படுத்தினால் நீயும் அவனை உதாசீனப்படுத்து. அவன் படத்தை நீ பண்ண கூடாதுன்னு சொன்னேன் என்று இயக்குனர் கங்கை அமரன் அந்த நேர்காணலில் கோபமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், எஸ்கே எனக்கு நண்பர் சகோதரர் போன்றவர். பல்வேறு காரணங்களால் அவருடன் நான் இணைந்து பணியாற்ற இருந்த படம் நடக்காமல் போய்விட்டது. அவ்வளவுதான். இதனால் எங்களுக்கு இடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை. சரியான நேரம் நல்ல கதை வரும்போது நாங்கள் சேர்ந்து பணியாற்றுவோம்.

மகனின் படம் தாமதம் அடைவதை பார்த்து ஒரு தகப்பனாக என் தந்தை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உண்மையாக நடந்தது என்ன என்பது அவருக்கு தெரியாது. படங்கள் தொடர்பாக அவரிடம் பகிர்வதும் இல்லை. இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்று அந்த பதிவில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்