- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாமே அதுதான் தீர்மானிக்குது, நல்லவங்க யார்… கெட்டவங்க யார் தெரியுமா? - இயக்குனர் வெற்றிமாறன் ஓபன்டாக்!

எல்லாமே அதுதான் தீர்மானிக்குது, நல்லவங்க யார்… கெட்டவங்க யார் தெரியுமா? – இயக்குனர் வெற்றிமாறன் ஓபன்டாக்!

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ் குத்து ரம்யா பானுப்பிரியா கிஷோர் டேனியல் பாலாஜி கருணாஸ் சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படம் தனுஷூக்கும் மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது.

அடுத்து ஆடுகளம் விசாரணை வடசென்னை அசுரன் விடுதலை விடுதலை 2 என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இதில் விடுதலை 2 படம் மட்டுமே விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதில் ஆடுகளம் அசுரன் படங்களில் நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்களில் நடித்த தனுஷூக்கு தமிழ் சினிமாவில் அவர் அடுத்தடுத்த உயரத்துக்கு செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தன. குறிப்பாக ஆடுகளம் அசுரன் வடசென்னை படங்கள், தனுஷின் முக்கிய அடையாளமாக இருந்தன. தனுஷ் கேரக்டரை அந்த அளவுக்கு செதுக்கி இயக்குனர் வெற்றிமாறன் தந்திருந்தார்.

ஆனால் வடசென்னை படத்தின் கிளை கதையாக சிம்பு நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க தயாராகி வருகிறார். இதற்கிடையே தனக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறனிடம் நடிகர் தனுஷ் கேட்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு வெளியான வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான் என்பதால் இப்படி கேட்டுள்ளார்.

இந்த சூழலில் இயக்குனர் வெற்றிமாறன், நல்லவங்க யார் கெட்டவங்க யார் என்பதற்கு விளக்கம் தரும் விதமாக அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வளர்த்து கடா மார்பில் பாய்வது போல, தன்னை வளர்த்துவிட்ட வெற்றிமாறனிடமே தனுஷ் ரூ. 20 கோடி கேட்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

அந்த பழைய நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, எல்லோருமே நல்லவங்க தான். எல்லோருமே கெட்டவங்க தான். ஏன்னா சூழல்தான் அதை உருவாக்குகிறது. குடும்பத்துக்காக தன் நண்பர்களுக்காக தான் ஒருத்தன் அப்படி செய்யறான். அவன் செய்யற ஒண்ணு மத்தவங்களை பாதிக்கலாம். அங்க வந்து அவன் கெட்டவனா தெரியலாம். அவங்களுக்கு அவன் வில்லனா தெரியலாம். ஆனா இங்க அவன்தான் ஹீரோ. எல்லோருமே நல்லவங்கதான். சூழல்தான் அதை உருவாக்கும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

சற்று முன்