- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம், டைரக்டர் சொல்லியும் வீட்டுக்கு செல்ல மறுத்த நடிகர் சூர்யா -...

படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம், டைரக்டர் சொல்லியும் வீட்டுக்கு செல்ல மறுத்த நடிகர் சூர்யா – நடந்ததை அப்படியே சொன்ன இயக்குனர் விக்ரமன்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்த ஆரம்ப கால படங்கள் சில பெரிய வெற்றியை கொடுத்து அவரை முன்னணி நடிகராக மாற்றியது. குறிப்பாக காக்க காக்க கஜினி உன்னை நினைத்து பிரண்ட்ஸ் போன்ற படங்கள் நடிகர் சூர்யாவுக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன.

இதற்கிடையே பூவே உனக்காக என்ற படத்தில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தார். அந்த படம் பெரிய ஹிட் ஆனது. அதன்பிறகு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிக்க கமிட் ஆன படம்தான் உன்னை நினைத்து. ஆனால் 2 வாரங்களில் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

அதன்பிறகு விஜய் கேரக்டரில் நடிகர் சூர்யா உன்னை நினைத்து படத்தில் நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. சூர்யாவுடன் சினேகா லைலா ரமேஷ் கண்ணா பாலு ஆனந்த் ஆர் சுந்தர்ராஜன் சித்ரா லட்சுமணன் தலைவாசல் விஜய் பல்லவி ராம்ஜி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்த போது வளரும் நடிகராக தான் இருந்தார். லாட்ஜ் ரிசப்னிஸ்ட் ஆக இருக்கும் சூர்யா, லைலா குடும்பத்துக்கு பலவிதங்களில் உதவி செய்வார். அதனால் லைலா சூர்யாவை காதலிப்பார். ஆனால் வசதியான ராம்ஜி வந்தவுடன் சூர்யாவை விட்டு விலகி விடுவார். அதன்பிறகு லாட்ஜ் மேனேஜரின் மகள் சினேகாவை சூர்யா கரம் பிடிப்பதுதான் இந்த படத்தின் கதை. காமெடி கலந்த இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, உன்னை நினைத்து படம் பண்ணுகிற போது சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிட்டு, 6 மணிக்கு சூர்யா முடிஞ்சுடுச்சு நீங்க வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிடுவேன். ஆனால் அவர் போக மாட்டார்.

அடுத்து என்ன சீன் எடுக்கிறார்கள். என்ன காமெடி காட்சி எடுக்கிறார்கள் என்று கையை கட்டி நின்னுக்கிட்டு அதையே வேடிக்கை பார்த்துட்டு இருப்பார். அப்படியே நைட் 10 மணி 11 மணி வரைக்கும் என்ன சீன் எடுக்கிறோமோ அதையே பார்த்துட்டு இருப்பார். அப்படி ஒரு டெடிகேஷன் உள்ள ஆர்ட்டிஸ்ட் அவர். ரொம்பவும் டிசிப்ளின் ஆன ஹீரோ. அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்